மத்திய பணியாளர் தேர்வாணையம்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் முடிவுகள் அறிவிப்பு
Posted On:
12 SEP 2024 6:04PM by PIB Chennai
பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் முடிவு 22.11.2023 தேதியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் 401 விண்ணப்பதாரர்களை நியமனத்திற்கு தகுதி வரிசையில் பரிந்துரைக்கிறது.
ஆணையம், பொறியியல் சேவைகள் தேர்வு விதிகள், 2023-ன் விதி 13 (iv) மற்றும் விதி 13 (v) க்கு இணங்க, கடைசியாக பரிந்துரைக்கப்பட்ட தேர்வருக்குக் கீழே தகுதி வரிசையில் ஒருங்கிணைந்த இருப்புப் பட்டியலைப் பராமரித்துள்ளது.
இப்போது, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை விடுத்த வேண்டுகோளின்படி, பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் அடிப்படையில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப 81 தேர்வர்களை (58 பொதுப்பிரிவு, 17- பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 06-பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் உட்பட) ஆணையம் இதன்மூலம் பரிந்துரைக்கிறது. இந்தத் தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை இந்த பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்.
பின்வரும் 03 (மூன்று) தேர்வர்களின் தேர்வு தற்காலிகமானது:
0502083, 0807832, 2100783
வேட்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அசல் ஆவணங்களை ஆணையம் சரிபார்க்கும் வரை தேர்வு முடிவுகள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நியமனம் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்களின் தற்காலிகத்தன்மை ரிசர்வ் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் காலகட்டத்திற்குள் தேர்வாணையம் கோரும் தேவையான ஆவணங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கத் தவறினால், அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும், மேலும் இது தொடர்பாக மேற்கொண்டு எந்த கடிதப் போக்குவரத்தும் ஏற்றுக்கொள்ளப்படாது.
*******
PKV/KPG/DL
(Release ID: 2054283)
Visitor Counter : 51