பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRMS) குறித்த 28 வது மாதாந்திர அறிக்கை வெளியீடு

Posted On: 11 SEP 2024 6:52PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை (DARPG) ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRMS) குறித்த 28 வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வு துறை (DARPG) ஆகஸ்ட் 2024 க்கான மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் (CPGRAMS) மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது, இது பொது குறைகளின் வகைகள் மற்றும் தீர்வு காணும் தன்மை பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது. இது, மத்திய அமைச்சகங்கள் / துறைகள் குறித்த 28-வது அறிக்கையாகும்.
2024 ஆகஸ்டில் மத்திய அமைச்சகங்கள் / துறைகளால் 2,32,885 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் 2024 ஜனவரி 1முதல் ஆகஸ்ட் 31வரை, குறைகளைத் தீர்ப்பதற்கான சராசரி அவகாசம் 12 நாட்கள் ஆகும். இந்த அறிக்கைகள் 10-அம்ச CPGRAMS சீர்திருத்த செயல்முறையின் ஒரு பகுதியாகும், இது தீர்வு காணும் தரத்தை மேம்படுத்துவதற்கும், காலக்கெடுவைக் குறைப்பதற்கும் DARPG ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆகஸ்ட் 2024 மாதத்தில் CPGRAMS இணையதளம் மூலம் பதிவுசெய்யப்பட்ட புதிய பயனர்களுக்கான தரவை இந்த அறிக்கை வழங்குகிறது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 90,684 புதிய பயனர்கள் பதிவு செய்துள்ளனர், அதிகபட்சமாக அசாமில் (40,796) பதிவுகள் உள்ளன.
2024 ஆகஸ்டில் பொதுச் சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த, அமைச்சகம் / துறை வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. CPGRAMS பொது சேவை மைய வலைதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2.5 லட்சம் கிராம அளவிலான தொழில்முனைவோர்களுடன் இணைந்து, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில் கிடைக்கிறது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் பொதுச் சேவை மையங்கள் மூலம் 39,276 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.எஸ்.சி.க்கள் மூலம் அதிகபட்ச குறைகள் பதிவு செய்யப்பட்ட முக்கிய பிரச்சினைகள் / வகைகளையும் இது எடுத்துக்காட்டுகிறது.
ஆகஸ்ட், 2024-ல், பின்னூட்ட அழைப்பு மையம் 94,275 பின்னூட்டங்களை சேகரித்தது, சேகரிக்கப்பட்ட மொத்த பின்னூட்டங்களில், ~54% குடிமக்கள் அந்தந்த குறைகளுக்கு வழங்கப்பட்ட தீர்மானத்தில் திருப்தி தெரிவித்தனர். ஆகஸ்ட், 2024-ல், பின்னூட்ட அழைப்பு மையத்தால் அமைச்சகம்/துறைக்காக 62,223 பின்னூட்டங்கள் சேகரிக்கப்பட்டன, சேகரிக்கப்பட்ட பின்னூட்டங்களில், ~63% குடிமக்கள் வழங்கப்பட்ட தீர்மானத்தில் திருப்தி தெரிவித்தனர்.கடந்த 8 மாதங்களில், குடிமக்களின் திருப்தி சதவீதத்திற்கு இணையான அமைச்சகம் /துறையின் செயல்திறன்,  மேற்படி அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சகங்கள்/துறைகளுக்கான ஆகஸ்ட் 2024-க்கான DARPG இன் மாதாந்திர CPGRAMS அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
பிஜி வழக்குகள்:
ஆகஸ்ட் 2024-ல், CPGRAMS இணையதளத்தில் 2,36,458 PG வழக்குகள் பெறப்பட்டன, 2,32,885 PG வழக்குகள் தீர்க்கப்பட்டன. 31ஆகஸ்ட், 2024 நிலவரப்படி 70,052 PG வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிஜி மேல்முறையீடு:
ஆகஸ்ட் 2024-ல் 18,359 மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு, 16,376 மேல்முறையீட்டு மனுக்கள் முடிக்கப்பட்டன
மத்திய செயலகத்தில் ஆகஸ்ட் 2024 இறுதியில் 28,184 முதுநிலை மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன
குறை தீர்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீடு (GRAI) - ஆகஸ்ட், 2024
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், அஞ்சல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைஆகியவை ஆகஸ்ட் 2024-க்கான குழு A க்குள் குறை தீர்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீட்டில் (500 க்கும் மேற்பட்ட குறைகள்) சிறப்பாக செயல்பட்டவர்களில் சிறந்து விளங்குகின்றன
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் நித்தி ஆயோக் ஆகியவை ஆகஸ்ட் 2024 க்கான குழு பி க்குள் குறை தீர்க்கும் மதிப்பீடு மற்றும் குறியீட்டில் (500 க்கும் குறைவான குறைகள்) சிறப்பாக செயல்பட்டவர்களில் சிறந்து விளங்குகின்றன.

**************


MM/RR/KV



(Release ID: 2054166) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi