புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டின் முதல் நாள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு உரையுடன் நிறைவடைந்தது
Posted On:
11 SEP 2024 7:09PM by PIB Chennai
புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டின் தொடக்க நாள்உலகளாவிய பங்குதாரர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க பங்கேற்புடன் நிறைவடைந்தது. 2024 செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் மூன்று நாள் நிகழ்வு, உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சூழல் அமைப்பில் இந்தியாவை ஒரு தலைமைத்துவமாக நிறுவுவதில் கவனம் செலுத்தி, பசுமை ஹைட்ரஜன் துறையில் ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் வெங்கடேஷ் ஜோஷி மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி ஆகியோரால் பசுமை ஹைட்ரஜன் துறையில் புதுமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சியுடன் தொடக்கத்துடன் இந்த நாள் தொடங்கியது. இக்கண்காட்சி 2024, செப்டம்பர் 13 வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றியபோது, பசுமை ஹைட்ரஜனில் உலகத் தலைமைத்துவமாக மாற தூய்மையான, பசுமையான பூமியை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்து, நாட்டின் கரியமிலவாயு வெளியேற்ற முயற்சிகளை குறிப்பிட்டார். 2023, ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், அவர் குறிப்பிட்டார். "பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் இந்த லட்சியத்தை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது புதுமைகளை இயக்கும், உள்கட்டமைப்பை உருவாக்கும், தொழில் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறையில் முதலீட்டை ஈர்க்கும் என்று கூறினார்.
பசுமை மற்றும் நிலையான நடைமுறைகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்ட, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, "இந்த பணி 8 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கும், 6 லட்சம் வேலைகளை உருவாக்குவதற்கும் ஆற்றலைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் அம்மோனியாவை நம்பியிருப்பதை கணிசமாகக் குறைக்கும், இது ரூ.1 லட்சம் கோடி சேமிப்புக்கு வழிவகுக்கும்." என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053845
***
IR/RS/KV
(Release ID: 2054147)
Visitor Counter : 76