திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
லியோனின் எல்.டி.எல்.சி மையத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி கலந்து கொண்டார்
Posted On:
11 SEP 2024 8:57PM by PIB Chennai
47 வது உலகத் திறன் போட்டி பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனால் பிரான்சின் லியோனில் உள்ள எல்.டி.எல்.சி அரங்கில் நடைபெற்ற பிரமாண்டமான தொடக்க விழாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்திய குழுவினர் உள்ளிட்ட இளம் பங்கேற்பாளர்களை சந்தித்து அவர்களின் நம்பிக்கையை மேம்படுத்தினார்.
உலகெங்கிலும் இருந்து 13,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், இந்திய குழு, 2024 உலகத் திறன் போட்டியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் ஆடை நேர்த்தியை வெளிப்படுத்தும் அவர்களின் தனித்துவமான உடையுடன் தனித்து நிற்கிறது.
உலகத் திறன் என்பது போட்டிக்கான ஒரு தளம் மட்டுமல்ல, அறிவைப் பகிர்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும், ஒற்றுமையை வளர்ப்பதற்கும் ஒரு தளமாகும்.
இந்திய குழுவினரிடையே பேசிய மத்திய அமைச்சர், "52 திறன்களில் போட்டியிடும் டீம் இந்தியாவைச் சேர்ந்த 60 இளம் சாம்பியன்கள், வெறும் பங்கேற்பாளர்கள் அல்ல, மாற்றத்தை உருவாக்குபவர்களாக செயல்படுவார்கள், திறமை, புதுமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். அவர்களை நேரில் சந்தித்ததும், இந்த உலக அரங்கில் பெருமையுடன் அணிவகுத்துச் சென்றதும், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு இந்த தருணங்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்பதை எனக்கு உணர்த்தியது”, என்று கூறினார்.
"திறன்களின் ஒலிம்பிக்ஸ்" என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் உலகத் திறன் 2024 போட்டி செப்டம்பர் 10 முதல் 15 வரை பிரான்சின் யூரோஎக்ஸ்போ லியோனில் நடைபெறும். 70 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,400 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 1,300 நிபுணர்களுடன் போட்டியிடுவார்கள் மற்றும் 2,50,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2053937
****************
BR/KV
(Release ID: 2054107)