வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இயற்கையின் தூய்மை, கலாச்சாரத்தின் தூய்மை
Posted On:
11 SEP 2024 9:45PM by PIB Chennai
தூய்மை இந்தியா மெகா பிரச்சாரத்தை முன்னிட்டு பதினைந்து நாள் நடவடிக்கைகளுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. 2017-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் தூய்மையே சேவை இயக்கம், அக்டோபர் 2-ஆம் தேதியான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் தூய்மை இந்தியா தினத்திற்கு முன்னோடியாக உள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த பிரச்சாரத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து கூட்டாக முன்னெடுத்து வருகிறது. 'இயற்கையின் தூய்மை, கலாச்சாரத்தின் தூய்மை’ என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் 2024 செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 2 அன்று முடிவடையும். இந்த ஆண்டு தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவடைகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி, தூய்மை எவ்வாறு அன்றாட வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக மாறியுள்ளது என்பதையும், நாடு முழுவதும் எவ்வாறு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். இந்த ஆண்டின் கருப்பொருள், நடத்தை மாற்றத்தை வளர்ப்பதை நோக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளுடன் தூய்மையை ஒருங்கிணைப்பதை இது வலியுறுத்துகிறது, அன்றாட வாழ்க்கையின் முக்கிய பகுதியாக தூய்மையை நோக்கி மாற்றியமைக்கப்பட்ட அணுகுமுறையை ஊக்குவிக்கிறது.
ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல், மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். வெகுஜன பொது பிரச்சாரத்தை அடிமட்ட அளவில் செயல்படுத்துவதை முறைப்படுத்துவதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகள், மத்திய அமைச்சகங்கள், தொழில்துறை, வளர்ச்சிப் பங்குதாரர்கள் ஆகியோருடன் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும், குடிநீர் வழங்கல் துறையும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தின. ஏற்பாடுகளை மதிப்பிடுவதற்கும், திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் மாநிலங்களுடன் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2053969
***************
BR/KV
(Release ID: 2054106)
Visitor Counter : 128