ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவின் கிராமப்புற சாலைகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்
Posted On:
11 SEP 2024 4:56PM by PIB Chennai
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவின் சாலைகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புதல் அளித்த திட்டங்களின் விவரம் வருமாறு:
-மத்தியப் பிரதேசத்தில் 152.44 கி.மீ நீளமுள்ள 60 சாலைகள், மகாராஷ்டிராவில் 745.286 கி.மீ சாலைகள் கேரளாவில் 117 சாலைகள் மற்றும் 11 பாலங்கள்.
- பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் 113.58 கோடி செலவில் 152.44 கி.மீ நீளமுள்ள 60 சாலைகள்.
- மத்திய பிரதேசத்தில், அனுப்பூரின் 10 சாலைகள், அசோக் நகரின் 05 சாலைகள், பாலகாட்டின் 04 சாலைகள், சிந்த்வாராவின் 08 சாலைகள், குணா மாவட்டத்தின் 04 சாலைகள்.
- குவாலியர், ஜபல்பூர், கட்னி, மொரேனா, சியோப்பூர் மாவட்டங்களில் தலா ஒரு சாலை.
- 07 ஷிவ்புரி, சித்தியின் 05 சாலைகள், 06 உமாரியா மற்றும் விதிஷா மாவட்டத்தின் 06 சாலைகள் அங்கீகரிக்கப்பட்டன.
- மகாராஷ்டிராவில் பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 745.286 கி.மீ சாலைப் பணிகள்.
-மகாராஷ்டிராவில் 655.66 கோடி மதிப்பில் 117 சாலைகள்
- கேரள மாநிலத்தில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 55.28 கோடி மதிப்பீட்டில் 11 பாலங்கள்.
***
SMB/AG/DL
(Release ID: 2053842)
Visitor Counter : 33