பாதுகாப்பு அமைச்சகம்
ஓமனில் ஈஸ்டர்ன் பிரிட்ஜ் VII என்ற பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது
Posted On:
11 SEP 2024 3:22PM by PIB Chennai
மிக் -29, ஜாகுவார், சி -17 விமானங்கள் அடங்கிய இந்திய விமானப்படை அணி ஓமனில் ஈஸ்டர்ன் பிரிட்ஜ் பயிற்சியில் பங்கேற்க தயார் நிலையில் உள்ளன. ஓமனின் விமானப்படை தளமான மசிராவில் 2024 செப்டம்பர் 11 முதல் 22 வரை இந்த ஏழாவது பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
ராயல் ஓமன் விமானப்படை - இந்திய விமானப்படை இடையே பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்த இந்த இருதரப்பு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராணுவ ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டு தயார்நிலையை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான கூட்டு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட இரு அணிகளுக்கும் ஒரு தளத்தை இது வழங்கும்.
இந்தப் பயிற்சி மாறுபட்ட சூழ்நிலைகளில் திறம்பட ஒத்துழைக்கும் இரு விமானப்படைகளின் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சிக்கலான வான்வழி நடவடிக்கைகளை கையாளுதல், வானிலிருந்து வான் மற்றும் வானிலிருந்து தரை நடவடிக்கைகள், தளவாட ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். இது இரு நாடுகளின் வளர்ந்து வரும் பாதுகாப்பு தேவைகள் மற்றும் ராணுவ நலன்களை பிரதிபலிக்கிறது.
ராயல் ஓமன் விமானப்படை- இந்திய விமானப்படை இடையேயான நீடித்த கூட்டாண்மையை எடுத்துக்காட்டும் வகையிலான, இந்தப் பயிற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான இவற்றின் உறுதிப்பாட்டைக் கொண்டது. இந்த விரிவான பயிற்சிக் காலத்தின் பகிரப்பட்ட நிபுணத்துவம் மற்றும் செயல்பாட்டு அனுபவத்திலிருந்து பங்கேற்கும் அணிகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
SMB/AG/KR/DL
(Release ID: 2053784)
Visitor Counter : 45