விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீனை கொள்முதல் செய்ய மத்தியப் பிரதேச அரசின் முன்மொழிவுக்கு ஒப்புதல்: திரு. சிவராஜ் சிங் சவுகான்

Posted On: 11 SEP 2024 4:06PM by PIB Chennai

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்று மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். விவசாயிகளுக்கு சேவை செய்வது என்பது நமக்கு கடவுளை வழிபடுவது போன்றதாகும். அண்மையில், மத்தியப் பிரதேச விவசாயிகள் சோயாபீன் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக கவலை அடைந்துள்ளனர் என்று திரு சிவராஜ் சிங் சவுகான் கூறினார். முன்னதாக மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீனை வாங்க அனுமதித்தோம் என்று கூறினார்.

 

மத்திய அமைச்சர் திரு சவுகான் நேற்று காலை 9 மணிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீன் வாங்குவது குறித்த செய்தியை அளித்தார். அதன் பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீனை வாங்க மத்திய பிரதேச அரசின் மோகன் அமைச்சரவையில் ஒரு முன்மொழிவு வந்தது, மாலையில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீன் வாங்குவதற்கான மாநில அரசின் கடிதத்தை மத்திய அரசு பெற்றது.

 

குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீன் வாங்குவதற்கான மத்தியப் பிரதேச அரசின் முன்மொழிவை நேற்றிரவு நாங்கள் பெற்றவுடன், இன்று காலை அந்த முன்மொழிவுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்தோம் என்று திரு சவுகான் கூறினார். மத்திய பிரதேச விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்; சோயாபீன் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படும், மேலும் விவசாயிக்கு அவரது கடின உழைப்புக்கான முழு விலையும் வழங்கப்படும்.

 

*****

IR/RR/KR


(Release ID: 2053779) Visitor Counter : 73


Read this release in: English , Urdu , Hindi