வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான பிணைப்பு நட்புறவு மற்றும் சகோதரத்துவத்தை வரையறுக்கும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
10 SEP 2024 6:23PM by PIB Chennai
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான நட்புறவு, இந்த தசாப்தம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நட்புறவு, உறவு மற்றும் சகோதரத்துவத்தை வரையறுக்கும் ஒன்றாக இருக்கும் என்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். மும்பையில் இன்று நடைபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா வர்த்தக அமைப்பு கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டு வர்த்தக இணை அமைச்சர் மேதகு டாக்டர் தானி பின் அகமது அல் ஜியோதி ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மை புதுமை, முதலீடு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய அடிப்படை மீது அமைந்துள்ளது என்று திரு கோயல் கூறினார். கணபதி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட அமைச்சர், கணபதி பண்டிகையின் போது பட்டத்து இளவரசரின் வருகை இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தின் புனிதமான தொடக்கத்தைக் குறிக்கிறது என்றார்.
இந்தகூட்டாண்மைமுன்னோக்கிச் செல்ல ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டுள்ளது என்று திரு கோயல் கூறினார். இந்தியாவின் வளர்ச்சி கதையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை முக்கிய பங்குதாரராக பிரதமர் திரு. நரேந்திர மோடி கருதுவதாக அவர் குறிப்பிட்டார். பட்டத்து இளவரசரின் வருகை ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் 6-வது உயர் நிலைக் குழு பயணம் என்றும், இந்த ஒத்துழைப்புக்கு இது ஒரு சான்றாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
இரு தரப்பினரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மை பெரும் மாற்றத்தை காணும் என்று அமைச்சர் கூறினார். இந்த மாற்றம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடங்கியுள்ள 50 ஆண்டுகால தொலைநோக்கு பார்வை மற்றும் பிரதமரின் Bharat@2047 மாற்றத்திற்கான பயணத்துடன் ஒத்துப்போகிறது என்று அவர் மேலும் கூறினார்.
***
(Release ID: 2053503)
IR/RR/KR
(Release ID: 2053655)
Visitor Counter : 35