மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் மூன்றாம் கட்டத்தை தொடங்கியது
प्रविष्टि तिथि:
10 SEP 2024 6:12PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியாதொலைநோக்கு பார்வைக்கான தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அதன் திறன் மேம்பாடு முயற்சிகளின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சிகள்டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, ஒப்பந்தம் மற்றும் கொள்முதல் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு செயலியின் பயன்பாடு, பெரிய டிஜிட்டல் உருமாற்ற திட்டங்களை நிர்வகித்தல், டிஜிட்டல் ஆளுகை மற்றும்தரவு மேலாண்மை போன்ற முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. மத்திய மற்றும் மாநில அளவிலான அலுவலர்களின் திறனை மேம்படுத்த நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் தொடரின் இரண்டாவது பிராந்திய திட்டம்'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை' மையமாகக் கொண்டது, 2024 செப்டம்பர் 10 அன்று தில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில் தொடங்கப்பட்டது. தேசிய மின்-ஆளுமை பிரிவால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, நவீன ஆளுமைக்கான தேசிய நிறுவனத்துடன் பயிற்சி பங்குதாரராக உள்ளது. மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பிற வட மாநிலங்களிலிருந்து 32 பங்கேற்பாளர்களுடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
***
(Release ID: 2053495)
IR/RR/KR
(रिलीज़ आईडी: 2053652)
आगंतुक पटल : 97