தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஜாம்ஷெட்பூர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் பிரசவ வலியால் தரையில் படுத்திருந்த பெண்ணுக்கு 27 மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்படாமல் தாயின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது
Posted On:
10 SEP 2024 6:04PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை 27 மணி நேரம் கவனிக்கவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்தியை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது. மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் அவர் தரையில் படுக்க வேண்டியிருந்தது என்று கூறப்படுகிறது. எனினும் எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல், குழந்தை மறுநாள் தாயின் கருவிலேயே உயிரிழந்தது. மேலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்த மற்றொரு பெண்ணுக்கு தரையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு ஜார்க்கண்ட் அரசின் தலைமைச் செயலாளருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை, மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் மற்றும் இதர வசதிகள் முதலிய தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிகாரிகளால் ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
BR/KR
***
(Release ID: 2053643)
Visitor Counter : 26