பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியாவின் சமூக நிறுவனங்கள் முதலீட்டில் விரைவான வளர்ச்சியைக் காண்கின்றன: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Posted On:
10 SEP 2024 8:26PM by PIB Chennai
இந்தியாவில் சமூக நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பு மற்றும் சாத்தியக்கூறுகள் அடுத்த ஆண்டுக்குள் 8 பில்லியன் அமெரிக்க டாலராக (7 பில்லியன் யூரோக்கள்) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் சமூக நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். 2010 மற்றும் 2016 க்கு இடையில் சமூக தாக்க முதலீடுகளுக்கான சராசரி ஒப்பந்த அளவு 7.6 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 17.6 மில்லியன் அமெரிக்க டாலராக (€ 15.4 மில்லியன்) அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
2024-ம் ஆண்டுக்கான 15-வது சமூகதொழில்முனைவோர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் பேசினார். சமூக தொழில்முனைவோர் மற்றும் ஜூபிலண்ட் பாரதியா அறக்கட்டளைக்கான ஷ்வாப் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, இந்திய சமூகத்தின் விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்முனைவோரின் நம்பமுடியாத சாதனைகள் மற்றும் புதுமைகளைக் கொண்டாடுகிறது.
"ஆண்டின் சிறந்த சமூக தொழில்முனைவோர் விருது" இந்தியாவின் சமூக தொழில்முனைவோர் இயக்கத்தின் சாம்பியன்களை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், இந்த நிறுவனங்கள் தங்கள் வரம்பை விரிவுபடுத்தவும், சாத்தியமான ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு தளத்தை வழங்குகிறது என்று அமைச்சர் கூறினார்.
இறுதிப் போட்டியில் பங்கேற்றவர்களின் குறிப்பிடத்தக்க புத்திக்கூர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக பாராட்டினார். நலத்திட்டங்களை திறம்பட வழங்குவதற்கான மோடி அரசின் அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் தொழில்நுட்பத்தை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்துவதை அவர் குறிப்பிட்டார். வேளாண்மை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக நிறுவனங்கள் எப்போதும் இந்திய வாழ்க்கை சூழலின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும், நாடு முழுவதும் சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2053563)
IR/RR/KR
(Release ID: 2053625)
Visitor Counter : 38