ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் காணொலி காட்சி மூலம் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தினார்
Posted On:
10 SEP 2024 8:43PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று காணொலி காட்சி மூலம் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். செப்டம்பர் 15 ஆம் தேதி ஜாம்ஷெட்பூரில் (ஜார்க்கண்ட்) பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு ரூ .2,745 கோடியை பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவிப்பார் என்றும், இதனுடன், 2024-25 நிதியாண்டில் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் ஏற்பு கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்றும் திரு சவுகான் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்பார்கள், மேலும் லட்சக்கணக்கான மக்கள் இணையதள வழியாக இந்த நிகழ்ச்சியில் இணைவார்கள்.
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திரு சவுகான், திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். மாநிலங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் இத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்க உறுதி தெரிவித்தனர். நாட்டின் ஏழை சகோதர சகோதரிகளை அனைத்து வகையிலும் மேம்படுத்துவதே மோடி அரசின் இறுதி இலக்கு என்று கூறிய மத்திய அமைச்சர், இதை அடைவதை நோக்கி பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் ஒரு முக்கியமான படியாகும் என்று கூறினார். இத்திட்டம் பெரும் வெற்றியுடன் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே நமது பிரதமரின் தீர்மானம் என்றும், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்-ஊரகம் மூலம் இலக்கை எட்டியுள்ளது என்றும் திரு சவுகான் தெரிவித்தார். இத்திட்டத்தின் வெற்றியையும், கிராமப்புற வீடுகளின் தேவையையும் உணர்ந்து, இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைப் பிரிவினருக்காக மத்திய அரசு கூடுதலாக 2 கோடி வீடுகளைக் கட்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
2024 மார்ச் மாதத்திற்க்குள் 2.95 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், அவற்றில் சுமார் அனைத்து வீடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 2.65 கோடி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய அமைச்சர் கூறினார். 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் இதுவரை வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட 26 லட்சம் பயனாளிகளின் புதுமனை புகுவிழா செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று திரு சவுகான் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. மோடி பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் அவர் தெரிவித்தார். ரூ.3.06 லட்சம் கோடிக்கும் அதிகமான செலவில் 2 கோடி கூடுதல் புதிய வீடுகள் கட்டப்படும் என்று கூறினார்.
***
(Release ID: 2053574)
IR/RR/KR
(Release ID: 2053623)
Visitor Counter : 52