பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் தலைமையில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்


நாட்டின் அறிவியல் சமூகம் தங்களது முயற்சிகளுக்கான ஆதாரங்களுக்குப் குறை இருக்காது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்: பிரதமர்

ஆராய்ச்சி சூழலில் உள்ள தடைகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்

உலகளாவிய பிரச்சனைகளுக்கு உள்ளூர் மயமாக்கப்பட்ட தீர்வில் கவனம் செலுத்துங்கள்: பிரதமர்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தகவல்களை எளிதாக கண்காணிக்க தரவு பலகையை உருவாக்க பிரதமர் ஆலோசனை

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கான வளங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவியல் ரீதியாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்

ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்களையும், வழிகாட்டி முறையில் நிறுவப்பட்ட உயர்மட்ட நிறுவனங்களையும் இணைத்து மையம் மற்றும் பேச்சுக்கான முறையில் ஒரு திட்டம் தொடங்கப்படும்.

எளிதாக ஆராய்ச்சி செய்வதற்கு நெகிழ்வான மற்றும் வெளிப்படையான நிதி அமைப்புடன் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்

தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமை துறைகளில் இயக்க முறையில் தீர்வை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிக்கான திட்டங்களை (ஏ.என்.ஆர்.எஃப்) அனுசந

Posted On: 10 SEP 2024 4:35PM by PIB Chennai

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.09.2024) 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப நிலப்பரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆட்சிமன்றக் குழுவின் முதல் கூட்டத்துடன் இன்று ஒரு புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூட்டத்தின் போது பிரதமர் கூறினார். நாட்டின் ஆராய்ச்சி சூழலில் உள்ள தடைகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது, அவற்றை அடைவதில் கவனம் செலுத்துவது, புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பற்றி அவர் பேசினார். தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுக் காண்பதில் ஆராய்ச்சியானது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். பிரச்சனைகள் உலகளாவிய இயல்புடையதாக இருக்கலாம், ஆனால் அவற்றின் தீர்வுகள் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் மயமாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

நிறுவனங்களை தரம் உயர்த்துதல் மற்றும் தரப்படுத்துவதன் அவசியம் குறித்து பிரதமர் விவாதித்தார். நிபுணர்களின் நிபுணத்துவத்தின் அடிப்படையில் ஒரு பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். நாட்டில் நிகழும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான தகவல்களை எளிதாகக் கண்காணிக்கக்கூடிய தரவு பலகையை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார்.

 

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களுக்கான வளங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவியல் ரீதியாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இது ஒரு லட்சியத் தொடக்கம் என்று கூறிய அவர், நாட்டின் அறிவியல் சமூகம் தங்கள் முயற்சிகளுக்கான ஆதாரங்களுக்குப் குறை இருக்காது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்றார். அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களின் சாதகமான தாக்கங்கள் குறித்து விவாதித்த பிரதமர், இந்த ஆய்வகங்களை தரம் பிரிக்கலாம் என்று ஆலோசனை கூறினார். சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான புதிய தீர்வுகளைத் தேடுவது, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மூலப்பொருட்கள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் குறித்தும் அவர் விவாதித்தார்.

 

கூட்டத்தின் போது, ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆரம்ப கட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்களையும், நிறுவப்பட்ட, உயர்மட்ட நிறுவனங்களையும் வழிகாட்டி முறையில் இணைப்பதன் மூலம் மையம் மற்றும் பேச்சுவார்த்தை திட்டத்தை தொடங்க ஆட்சி மன்றக் குழு முடிவு செய்தது.

 

முக்கிய துறைகளில் இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு, தேசிய முன்னுரிமைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை சீரமைத்தல், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், திறன் மேம்பாடு, அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை இயக்குதல், அத்துடன் தொழில்துறை சார்ந்த மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மூலம் கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் உள்ளிட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் உத்தி சார்ந்த தலையீடுகளின் பல பகுதிகளையும் ஆட்சிமன்றக் குழு விவாதித்தது.

 

மின்சார வாகன இயக்கம், மேம்பட்ட பொருட்கள், சூரிய மின்கலங்கள், பொலிவுறு உள்கட்டமைப்பு, சுகாதாரம், மருத்துவ தொழில்நுட்பம், நீடித்த வேளாண்மை மற்றும் போட்டோனிக்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமை துறைகளில் தீர்வை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிக்கான திட்டங்களை அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடங்கும். இந்த முயற்சிகள் தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது பயணத்திற்கு துணையாக இருக்கும் என்று ஆட்சிமன்றக் குழு கவனத்தில் ஏற்றுக் கொண்டது.

 

தொழில்துறையின் தீவிர பங்கேற்புடன் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சியை சுட்டிக் காட்டும் அதே வேளையில், அறிவு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆராய்ச்சியை மேம்படுத்துவதையும் ஆட்சிமன்றக் குழு வலியுறுத்தியது. மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலில் பல்துறை ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க சிறப்பு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. எளிதாக ஆராய்ச்சி செய்வதற்கு நமது ஆராய்ச்சியாளர்களுக்கு நெகிழ்வான மற்றும் வெளிப்படையான நிதி அமைப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

 

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உத்திகள் “வளர்ச்சியடைந்த இந்தியா-2047-”வின் இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்றும், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சிறந்த நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் ஆட்சிமன்றக் குழு அறிவுறுத்தியது.

 

இந்தக் கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவராக பங்கேற்றார். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் உறுப்பினர் செயலாளர், நித்தி ஆயோக், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வித் துறை ஆகியோர்  அதன் அலுவல் சார் உறுப்பினர்களாக கலந்து கொண்டனர்.  பேராசிரியர் மஞ்சுல் பார்கவா (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா), டாக்டர் ரொமேஷ் டி வாத்வானி (சிம்பொனி டெக்னாலஜி குரூப், அமெரிக்கா), பேராசிரியர் சுப்ரா சுரேஷ் (பிரவுன் பல்கலைக்கழகம், அமெரிக்கா), டாக்டர் ரகுவேந்திர தன்வர் (இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்), பேராசிரியர் ஜெயராம் என்.செங்கலூர் (டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்) மற்றும் பேராசிரியர் ஜி.ரங்கராஜன் (இந்திய அறிவியல் நிறுவனம்) ஆகியோர் முக்கிய பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர்.

 

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி மன்றம் பற்றி

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை இந்தியாவின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் நிறுவப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியின் உயர்மட்ட உத்திகளை வழங்குவதற்கான உயர் அமைப்பாக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை தொழில், கல்வி, அரசு துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை உருவாக்குகிறது.

 

***

LKS/RS/DL


(Release ID: 2053519) Visitor Counter : 190