மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மீனவர் நலத்திட்ட தொடக்கம்: மீன்வளத் துறையில் நிலையான இயக்க நடைமுறை வெளியீடு: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்பு
Posted On:
10 SEP 2024 2:46PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பிரதமரின் மீனவர் நல திட்டத்தையும், பிரதமரின் மீன்வள திட்டத்தின் 4-வது ஆண்டு விழாவில் மீன்வளத் துறையில் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொகுப்புகளுக்கான நிலையான இயக்க நடைமுறையையும் தொடங்கி வைக்கிறார்.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறையின் பிரதிநிதிகள், மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகள்/அமைச்சகங்களின் அதிகாரிகள், பிரதமரின் மீன்வளத் திட்ட பயனாளிகள், மீனவர்கள், மீன் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் நாடு முழுவதும் இருந்து மீன்வளத் துறையில் ஈடுபட்டுள்ள முக்கிய பங்குதாரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு, அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மற்றும் பிற மதிப்புச் சங்கிலி பெருக்க தலையீடுகள் தொடர்பாக பிரதமரின் மீன்வள திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அறிவிக்கிறார். 2024-25 நிதியாண்டில் பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேசிய முன்னுரிமைத் திட்டங்கள், கையேடுகள் வெளியீடு, சிறப்பு மையம் மற்றும் இனப்பெருக்க மையங்களை அறிவித்தல், கடலோர மீனவ கிராமங்களை, பருவநிலையை தாக்குப் பிடிக்கும் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் மீன்வள தொகுப்புகளாக மேம்படுத்துவது குறித்து அறிவிக்கை செய்தல் மற்றும் டிஜிட்டல் இணையதளத்தை தொடங்குதல் போன்றவை பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் நான்காவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது முன்னிலைப்படுத்தப்படும் முக்கிய நடவடிக்கைகளாகும்.
2014-ம் ஆண்டு முதல் ரூ.38,572 கோடி முதலீடு செய்வதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலம் நீலப் புரட்சியின் மூலம் மீன்வளத் துறையின் மாற்றத்தை இந்திய அரசு முன்னெடுத்துள்ளது.
பிரதமரின் மீன்வளத்திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உருவெடுத்துள்ளது. இந்த தொலைநோக்குத் திட்டம், இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ், மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன், தரம், தொழில்நுட்பம், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, நவீனமயமாக்கல் மற்றும் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல், தடமறிதல், வலுவான மீன்வள மேலாண்மை கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் மீனவர்களின் நலன் ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமரின் மீன்வளம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள், முக்கிய உட்கட்டமைப்பு மேம்பாடு, இந்திய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை நவீனப்படுத்துதல், குறிப்பாக புதிய மீன்பிடி துறைமுகங்கள் / இறங்கு தளங்களை உருவாக்குதல், பாரம்பரிய மீனவர் கைவினைப் படகுகள் - இழுவைப் படகுகள் - ஆழ்கடலில் செல்லும் கப்பல்களை நவீனப்படுத்துதல் மற்றும் இயந்திரமயமாக்குதல், நாட்டில் மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான தரமான தீவனம் மற்றும் விதைகள் வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.
இது மீனவர்கள், மீன் விவசாயிகள், தொழில்முனைவோர், பிற பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் துடிப்பான மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையிலிருந்து ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சி பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் சாதனைகளையும், மத்திய அரசின் மீன்வளத் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மீன் வளத்திட்டத்தின் சாதனைகள் மற்றும் இந்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053416
-----------
LKS/RS/RR
(Release ID: 2053457)
Visitor Counter : 74