நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகள் குறித்த அரையாண்டு ஆய்வுக் கூட்டம்
Posted On:
09 SEP 2024 9:09PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள ஸ்கோப் வளாகத்தில் நிலக்கரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகளின் அரையாண்டு ஆய்வுக் கூட்டத்தை நிலக்கரி அமைச்சகம் நடத்தியது. நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குநர் திருமதி சந்தோஷ், அமைச்சகத்தின் பிற அதிகாரிகள், கோல் இந்தியா லிமிடெட் இயக்குநர் (பணியாளர்) மற்றும் அனைத்து நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தற்போது நடைபெற்று வரும் சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுதல், சமூகங்கள் மீதான அவற்றின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் அவற்றை சீரமைத்தல் ஆகியவற்றில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்ற துறைகளில் சி.எஸ்.ஆர் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதங்கள் மையம் கொண்டிருந்தன. உள்ளூர் சமூகங்களின், குறிப்பாக நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அளவிடக்கூடிய விளைவுகளை உறுதி செய்வதற்காக இந்த முயற்சிகளை விரைவாகச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சகம் வலியுறுத்தியது.
உள்ளூர் சமூகங்களின் திறன் தொகுப்புகளை மேம்படுத்தி, அதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பன்முக திறன் மேம்பாட்டு நிறுவனங்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அமைச்சகம் வலியுறுத்தியது.
நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகள் தொடர்ந்து சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, சமூக மேம்பாடு, சுகாதாரம், நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி கூட்டம் நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053286
***
BR/RR
(Release ID: 2053344)
Visitor Counter : 45