வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வாகன உதிரிபாகங்கள் துறை 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
09 SEP 2024 6:03PM by PIB Chennai
2030-ம் ஆண்டுக்குள் வாகன உதிரிபாகங்கள் துறை 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டும் என்றும், இதன் மூலம் நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் ஒன்றாக வாகன உதிரிபாகங்கள் துறை திகழும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஏசிஎம்ஏ) 64-வது ஆண்டு அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், தற்போது உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையாக இருக்கும் வாகன உதிரிபாகங்கள் துறையும் உலகில் முன்னணியாகத் திகழ முயற்சிக்க வேண்டும் என்று திரு கோயல் கூறினார். இந்த இலக்கை அடைய ஒரு திட்டத்தை வகுக்குமாறு தொழில்துறை தலைவர்களை அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் இயற்கை வேளாண் வளர்ச்சியை உலகெங்கிலும் உள்ள பரவலாக இணைக்க வேண்டும் என்று திரு கோயல் வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறு தொழில்துறை உறுப்பினர்களை அமைச்சர் ஊக்குவித்தார்.
இந்தியாவின் வாகன உதிரிபாகங்கள் துறை வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு நன்கு தயாராக உள்ளது என்றும், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக நாடுகளிலிருந்து முதலீட்டைப் பெறுவதற்கான வழிகளை ஆராய முடியும் என்றும் திரு பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053179
---
IR/KPG/DL
(Release ID: 2053221)
Visitor Counter : 50