சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ராஜேஷ் வர்மா பொறுப்பேற்றார்

Posted On: 09 SEP 2024 4:54PM by PIB Chennai

இந்திய ஆட்சிப்பணியின், ஒடிசா கேடரின் 1987 தொகுதி அதிகாரியான திரு ராஜேஷ் வர்மா, தலைநகர் தில்லி பிராந்தியம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர தலைவராக இன்று பொறுப்பேற்றார். திரு. வர்மா பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை, இதில் எது முந்தையதோ அந்தக் காலம் வரை பணியில் இருப்பார். பொது நிர்வாகத்தில் மூன்றரை தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமும், நிபுணத்துவமும் கொண்டவர் ஆவார் அவர்.

 

குடியரசுத் தலைவர் செயலகம், பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மின்சார அமைச்சகம், புது தில்லியில் உள்ள கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் ஒடிசா அரசின் கீழ் கல்வி, எஃகு மற்றும் சுரங்கங்கள், வேளாண் மற்றும் எரிசக்தி துறைகள், ஒடிசா அரசின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகங்கள் மற்றும் ராஜஸ்தான் அரசு உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய விரிவான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். இந்த அமைப்புகள் / துறைகளில் காற்று மாசுபாடு பிரச்சினையை நிவர்த்தி செய்வதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

 

2024 ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்பு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் செயலாளராகவும் அவர் பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் ஆணையத்தை வழிநடத்திய பின்னர் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடித்த டாக்டர் எம்.எம்.குட்டிக்குப் பிறகு திரு. ராஜேஷ் வர்மா இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

***

PKV/RR/KR/DL


(Release ID: 2053162) Visitor Counter : 54


Read this release in: English , Urdu , Hindi