எஃகுத்துறை அமைச்சகம்
இந்தியாவில் எஃகுத் துறையை பசுமையாக்குவதற்கான அறிக்கையை எஃகு அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Posted On:
06 SEP 2024 5:26PM by PIB Chennai
எஃகு அமைச்சகம், செப்டம்பர் 10 , 2024 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் உள்ள சி.டி.தேஷ்முக் அரங்கில் 'பசுமை எஃகு நிலைத்தன்மைக்கான பாதை' என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள், கல்வியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் எஃகுத் தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வின் போது, எஃகு தொழில்துறையின் நிபுணர்கள் மற்றும் அனுபவசாலிகளிடையே 'தலைமைத்துவம் மற்றும் கண்டுபிடிப்பு பசுமை எஃகு மாற்றத்தை இயக்குதல்' என்ற தலைப்பில் குழு விவாத அமர்வு நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியின் போது, எஃகு துறையில் கரியமில நீக்கத்தை நோக்கியப் பாதையை வரையறுப்பதற்காக இந்த அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 14 பணிக்குழுக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவில் எஃகு துறையை பசுமையாக்குதலுக்கான சாலை வரைபடம் மற்றும் செயல் திட்டம் குறித்த அறிக்கையை எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் வெளியிடுவார்.
இந்தியாவில் எஃகுத் துறையில் கார்பன் உமிழ்வு தொடர்பான பல்வேறு அம்சங்களுக்கு இந்த அறிக்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கவனம் செலுத்தும் அம்சங்கள்:
தற்போதைய நிலை மற்றும் சவால்கள் இந்தியாவில் எஃகு துறையின் கண்ணோட்டம், அதன் கரியமில வாயு தடம் மற்றும் கரியமில வாயுவை அகற்றுவதில் எதிர்கொள்ளும் சவால்கள்.
கரியமில வாயுவை அகற்றத்திற்கான தூண்டுகோல்கள்: எரிசக்தி சிக்கனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொருள் சேமிப்பு, செயல்முறை மாற்றம், சிசியுஎஸ், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பயோசார் பயன்பாடு.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்: கரியமில வாயு குறைக்க உதவும் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள்.
கொள்கை கட்டமைப்புகள் : தற்போதுள்ள கொள்கைகளை ஆய்வு செய்தல் மற்றும் கரியமில வாயு அகற்றத்தை ஆதரிப்பதற்கான சாத்தியமான கொள்கை மேம்பாடுகள் குறித்த விவாதம்.
எதிர்கால கண்ணோட்டம்: ஒரு நிலையான எஃகு தொழிற்துறைக்கான பார்வை மற்றும் இந்த இலக்குகளை அடைவதில் பல்வேறு பங்குதாரர்களின் பங்கு.
வழிகாட்டு குறிப்பு மற்றும் செயல் திட்டம்: அரசு மற்றும் தொழில்துறையினரிடமிருந்து தேவைப்படும் உத்திகள் மற்றும் தலையீடுகள்.
தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட உறுதிப்பாடுகளின் (என்.டி.சி) கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலக்குடன் ஒத்துப்போகும் வகையில் இந்தியாவில் கார்பன் உமிழ்வு மற்றும் எஃகு துறையின் கரியமில வாயு அகற்றம் ஆகியவற்றைக் குறைப்பதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டத்தைப் பின்பற்ற எஃகு அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த அறிக்கை இந்திய எஃகு தொழிலில் குறைந்த அளவில் கரியமில் வாயு உமிழ்வை அடைவதற்கு, எஃகு துறையை வடிவமைப்பதிலும், வழிகாட்டுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.
----
MM/KPG/DL
(Release ID: 2052633)