சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற பாட்டா பயண மார்ட் 2024-ல் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்பு

Posted On: 06 SEP 2024 4:41PM by PIB Chennai

உலகளாவிய பயணத் தொழில் மற்றும் பங்குதாரர்களை அடையவும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் 2024 ஆகஸ்ட் 27 முதல் 29 வரை பாங்காக்கில் நடைபெற்ற பாட்டா டிராவல் மார்ட்டில் பங்கேற்றது. வியத்தகு இந்தியா அரங்கை தாய்லாந்துக்கான இந்திய தூதர் திரு நாகேஷ் சிங் மற்றும் சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

 

பாட்டா டிராவல் மார்ட் ஆசிய துணைக் கண்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க பயண கண்காட்சிகளில் ஒன்றாகும். அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பயணத் துறையில் முன்னணி தனியார் துறை பங்குதாரர்களை உள்ளடக்கிய இந்திய தூதுக்குழு, இந்த உலகளாவிய அரங்கில் நாட்டின் சுற்றுலா சலுகைகளை காட்சிப்படுத்தியது. உலகளாவிய சாத்தியமான பயண பங்குதாரர்களுடன் பயனுள்ள வணிக ஈடுபாடுகளில் ஈடுபட்டது. உள்நாட்டில் சுற்றுலாவை கணிசமாக அதிகரிக்கும் இலக்குடன், முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உத்திசார் நோக்கத்தை இந்த பங்கேற்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

 

பாட்டா 2024-ல் உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் சாத்தியமான பயணிகளுடன் ஈடுபடுவதன் மூலம், இந்தியா அதன் மாறுபட்ட இடங்களை வெளிப்படுத்துவதையும், தன்னை ஒரு முதன்மையான பயண இடமாக நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023-ம் ஆண்டில் மொத்தம் 9.24 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்தியா கண்டது.

 

துடிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் முதல், அனைவரையும் ஈர்க்கக் கூடிய இயற்கை அழகு மற்றும் அன்பான விருந்தோம்பல் வரை இந்தியாவின் சிறந்த பயண அனுபவங்களை இந்தியா அரங்கு காட்சிப்படுத்தியது. இந்த முக்கிய பயண வர்த்தக நிகழ்வு ஒரு உலகளாவிய அரங்காகும், அங்கு இந்திய சுற்றுலா பங்குதாரர்கள் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம் முதல் அதன் நவீன, புதுமையான அனுபவங்கள் வரை பல்வேறு இடங்களை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

 

***

(Release ID: 2052551)

PKV/RR


(Release ID: 2052558) Visitor Counter : 55


Read this release in: English , Urdu , Hindi , Telugu