வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்க இந்தியா- மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 06 SEP 2024 2:26PM by PIB Chennai

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஐரோப்பா- ஆசியா இடையே விரைவான பொருள் போக்குவரத்திற்கும்  இந்தியா- மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம் முக்கியமானது என்று மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் இந்தியா- மத்திய கிழக்கு கடல்பகுதி வணிக மாநாட்டில் உரையாற்றிய அவர், ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் வழியாக இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை  இணைப்பதற்கான இந்தத் திட்டம், இந்தியாவில் ஜி20 தலைமைத்துவத்தின் போது தொடங்கப்பட்டது என்றார். குறைவான போக்குவரத்து செலவு, விரைவான தொடர்பு, பாதுகாப்பான பொருள் போக்குவரத்து ஆகியவை இந்தப் பகுதியின் சிறந்த ஒத்துழைப்பை சார்ந்துள்ளது என்று திரு கோயல் குறிப்பிட்டார்.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற முன் முயற்சிகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்  மூலம் எளிதாக வணிகம் செய்வதை நோக்கிய மத்திய அரசின் முயற்சிகள்,  பொருளாதார கூட்டாண்மைகள் ஆகியவையும் இந்தியாவின் பொருள் உற்பத்தியை அதிகரித்திருப்பதும், நாட்டின் வேளாண் மதிப்பு தொடர்களை மேம்படுத்தும் முயற்சிகளும், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான முன் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அமைச்சர் திரு கோயல் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே சுற்றுலாத் துறையில் பணிக்குழுவை அரசு உருவாக்க வேண்டும் என்று  யோசனை தெரிவித்த திரு கோயல், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மைக்கான மாபெரும் ஆற்றலாக இந்தியா உள்ளது என்று கூறினார்.  கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள் மேம்பாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்பை இந்தியா பெற்றிருந்தது என்றும், இதன் மூலம் துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகியது என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில்  துறைமுகங்களின் திறன் மேலும் இருமடங்காக அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2052486

***

SMB/AG/RR


(Release ID: 2052511) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi