வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவுசார் சொத்து விருதுகள் 2024 புதுமை மற்றும் சிறப்பைக் கொண்டாடுகிறது

Posted On: 05 SEP 2024 5:14PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம், அறிவுசார் சொத்து விருதுகள் 2024க்கான விண்ணப்பங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த மதிப்புமிக்க முயற்சி கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவுசார் சொத்துரிமை துறையில் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமையை கணிசமாக மேம்படுத்திய கண்டுபிடிப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதை தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. புதுதில்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

தொழில்துறை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், MSMEகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் பிற நிறுவனங்களை தங்கள் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்கவும், இந்த மதிப்புமிக்க விருது திட்டத்தில் பங்கேற்கவும் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அழைக்கிறது. இந்த விருதுகள் நிறுவனங்கள் தங்கள் அற்புதமான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகின்றன. இதன் மூலம் கல்வி, தொழில்துறை மற்றும் பொதுத் துறைகளில் அவற்றின் நற்பெயரை மேம்படுத்துகின்றன.

இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவதற்கும், புலமைச் சொத்துத் துறைக்கு தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்துவதற்கும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. புதுமை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதில் நிறுவனங்களின் பங்கேற்பு முக்கியப் பங்கு வகிக்கும்.

மேலும் தகவலுக்கு மற்றும் மின்னஞ்சல் மூலம் உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்: ipawards.ipo[at]gov[dot]in


(Release ID: 2052421)