புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பயோமாஸ் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கு - சண்டிகரில் நடைபெற்றது
Posted On:
05 SEP 2024 4:34PM by PIB Chennai
நாட்டில் பயோமாஸ் விநியோகச் சங்கிலிகளின் திறன் வாய்ந்த நிர்வாகத்துடன் தொடர்புடைய சவால்கள், வாய்ப்புகள் குறித்த தேசியக் கருத்தரங்கு இன்று (05 செப்டம்பர் 2024) சண்டிகரில் நடைபெற்றது. "உயிரி விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கு: சவால்கள், வாய்ப்புகள், மேம்பாடுகள்" என்ற தலைப்பில் இது நடைபெற்றது. மத்திய அரசின் புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான கபுர்தலாவில் உள்ள சர்தார் ஸ்வரண் சிங் தேசிய உயிரி எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் (SSS-NIBE) இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது.
சுழற்சிஉயிரி பொருளாதாரத்திற்கு இந்தியா மாறுவதற்கு ஆதரவளிக்கும் வகையில், செலவு குறைந்த, திறமையான உயிரி எரிபொருள் விநியோக சங்கிலிகளை உருவாக்க ஒத்துழைப்பை ஊக்குவிப்பது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள், தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களை இது ஒன்றிணைத்தது.
நுண்ணறிவுகள், அனுபவங்கள், பயோமாஸ் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் சிறந்த நடைமுறைகளை இது பகிர்ந்து கொண்டது. நாட்டில் உயிரி எரிசக்தி திட்டங்களின் வெற்றிக்கு திறமையான உயிரி எரிசக்தி விநியோகச் சங்கிலிகளின் தேவையை எடுத்துரைப்பதை இந்த கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டு விவாதித்தது.
***
PLM/RS/DL
(Release ID: 2052347)
Visitor Counter : 40