பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திராவில் இந்திய கடற்படையின் வெள்ள நிவாரண பணிகள்

प्रविष्टि तिथि: 04 SEP 2024 5:37PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், கிழக்குக் கடற்படையின் கட்டுபாட்டில் உள்ள இந்திய கடற்படையினர், மாநில நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உதவியாக முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. கடற்படை தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதுடன், விமானங்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கிறது.

வெள்ள நிவாரண பணிகளில்  ஈடுபட்டுள்ள கடற்படை ஹெலிகாப்டர்கள் 1,820 கிலோ உணவுப் பொட்டலங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு 22 கிலோ மருந்துகள் விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிகளுக்கு மேலும் உதவும் விதமாக, என்.டி.ஆர் மாவட்டத்தின் அஜித் சிங் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணக் குழுக்கள் (எஃப்.ஆர்.டி) உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெமினி படகுகள் மூலம் அணுகக்கூடிய இடங்களிலிருந்து பணியாளர்களை வெளியேற்றவும் இந்த குழுக்கள் உதவுகின்றன.

மேலும், தொழில்நுட்ப குழுக்களும் விஜயவாடா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

***

MM/AG/DL


(रिलीज़ आईडी: 2051885) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी