அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வெப்ப அடிப்படையிலான அணுகுமுறை கீமோதெரபி சிகிச்சையைக் குறைக்கும்
Posted On:
04 SEP 2024 1:39PM by PIB Chennai
பயனுள்ள காந்த ஹைபர்தர்மியா அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சைக்காக ஆராய்ச்சியாளர்கள், வெப்ப அதிர்ச்சி புரதம் 90 தடுப்பானுடன் (எச்எஸ்பி 90 ஐ) அதி-சிறிய காந்த நானோ துகள்களின் (எம்.டி) கலவையைப் பயன்படுத்தியுள்ளனர். இது கீமோதெரபி அளவைக் குறைத்து சிகிச்சை செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும். இது பக்க விளைவுகளை குறைக்கும் துணை சிகிச்சையாக செயல்படும்.
உலக அளவில் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருவதால், புதிய சிகிச்சை முறைகளின் தேவை முக்கியமானது. கீமோதெரபி, அறுவை சிகிச்சை போன்ற பாரம்பரிய சிகிச்சைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்த சவால்களை எதிர்கொள்ள, குறைவான பக்க விளைவுகளைக் கொண்ட நானோ தெரபி போன்ற புதுமையான சிகிச்சைகளில் மருத்துவ விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர்.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் - தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐ.என்.எஸ்.டி) விஞ்ஞானிகள், வெப்ப அதிர்ச்சி புரதம் 90 (எச்.எஸ்.பி 90)-ன் தடுப்பானான 17-டிஎம்ஏஜி-யைப் பயன்படுத்தும் உத்தியை உள்ளடக்கிய சிகிச்சையானது, காந்த ஹைபர்தர்மியா அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையுடன் (எம்.எச்.சி.டி) இணைந்து வெப்ப அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வு தொடர்பான வெளியீட்டை https://doi.org/10.1021/acsnano.4c03887 என்ற இணையதள இணைப்பைப் பார்க்காலம்.
***********
PLM/KPG/KR/DL
(Release ID: 2051810)
Visitor Counter : 48