பாதுகாப்பு அமைச்சகம்
'வலிமையான ராணுவம், வளமான இந்தியா கண்காட்சி' ராஞ்சியில் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
04 SEP 2024 12:46PM by PIB Chennai
பொதுமக்களுக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கும், நாட்டை வலுவாக கட்டமைப்பதற்காக இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மொராபாடி மைதானத்தில் 2024, செப்டம்பர் 06 முதல் 08-ம் தேதி வரை ''வலிமையான ராணுவம், வளமான இந்தியா' (சஷக்த் சேனா, சம்ரித் பாரத்') என்ற கண்காட்சி நடைபெறவுள்ளது. பல்வேறு சிவில், ராணுவ பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் கலந்து கொள்கிறார். இதனை அனைவரும் பார்வையிடலாம். ஆயுதப் படைகள் பற்றி அறிந்து கொள்ளவும், வீரர்களுடன் கலந்துரையாடவும் மக்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்தக் கண்காட்சியில் ஆயுதங்கள், உபகரணங்கள், வான்வெளி நிகழ்ச்சிகள், டேர்டெவில் மோட்டார் வாகன சாகச நிகழ்ச்சி, நாய்கள் கண்காட்சி, வெப்பக் காற்று பலூன் பறக்குவிடும் நிகழ்ச்சி ஆகியவையும் இடம்பெறும். நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ராணுவ இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும். களரிப்பயிற்று, மல்லர்கம்பம், பாங்க்ரா உள்ளிட்ட தற்காப்பு கலை நிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும். மேலும், ஆயுதப்படையில் சேரும் முறை, அங்குள்ள வாழ்க்கை முறைக் குறித்து இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஊக்குவித்தல், விழிப்புணர்வு அரங்குகளும் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்படவுள்ளது.
-----
(Release ID 2051661)
PLM/KPG/KR
(रिलीज़ आईडी: 2051749)
आगंतुक पटल : 69