மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டிலான 7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 02 SEP 2024 4:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும்அவர்களின் வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் ரூ.14,235.30 கோடி மதிப்பீட்டில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1)   டிஜிட்டல் வேளாண் இயக்கம்: டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில்டிஜிட்டல் வேளாண் இயக்கம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் ரூ.2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண் பரப்பு

டிஜிட்டல் பயிர் மதிப்பீடு

டிஜிட்டல் மகசூல் மாடலிங்

பயிர் கடனுக்கான இணைப்பு

செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள்

வாங்குபவர்களுடன் இணைப்பு

மொபைல் போன்களில் புதிய அறிவைக் கொண்டு வருதல்

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல்: இதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,979 கோடி. இந்த முயற்சி விவசாயிகளை பருவநிலை நெகிழ்திறனுக்கு தயார்படுத்துவதுடன்  2047-ம் ஆண்டுக்குள் உணவு பாதுகாப்பை வழங்கும். இதுஆராய்ச்சி மற்றும் கல்விதாவர மரபியல் வள மேலாண்மைஉணவு மற்றும் தீவனப் பயிருக்கான மரபியல் மேம்பாடுபயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர் பெருக்கம்வணிகப் பயிர்களைப் பெருக்குதல்பூச்சிகள்நுண்ணுயிரிகள்மகரந்தச் சேர்க்கையாளர்கள் போன்றவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என 7 அம்சங்களைக் கொண்டதாகும்.

3. வேளாண் கல்விமேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்: மொத்தம் ரூ.2,291 கோடி ஒதுக்கீட்டில் இந்த நடவடிக்கை வேளாண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்படுத்தும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குதல்புதிய கல்விக் கொள்கை 2020, டிஜிட்டல் டிபிஐ, செயற்கை நுண்ணறிவு, பெருந்தரவு போன்ற  நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்,  இயற்கை விவசாயம் மற்றும் பருவநிலை நெகிழ்திறனை சேர்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது செயல்படும்.

4. நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் உற்பத்தி: மொத்தம் ரூ.1,702 கோடியில்கால்நடைகள் மற்றும் பால் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடை கல்வி,  பால் பண்ணை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுவிலங்கு மரபியல் வள முகாமைத்துவம்உற்பத்தி மற்றும் மேம்பாடுகால்நடை ஊட்டச்சத்து மற்றும் சிறிய அசைபோடும் விலங்குகள் உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

5. தோட்டக்கலையின் நிலையான வளர்ச்சி: மொத்தம் ரூ.1,129.30  கோடி செலவில் இந்த நடவடிக்கை தோட்டக்கலை தாவரங்களிலிருந்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவெப்பமண்டலதுணை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தோட்டக்கலை பயிர்கள்வேர்கிழங்குகுமிழ் மற்றும் வறண்ட பயிர்கள்காய்கறிமலர் வளர்ப்பு மற்றும் காளான் பயிர்கள்தோட்டப்பயிர்கள், மசாலாமருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை உள்ளடக்கியது.

6. ரூ.1,202 கோடியில் வேளாண் அறிவியல் மையத்தை வலுப்படுத்துதல்

7. ரூ.1,115 கோடியில் இயற்கை வள மேலாண்மை

***

PKV/KPG/KR/DL

 
 
 
 


(Release ID: 2050983) Visitor Counter : 119