பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புத்தகயாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து மாற்றத்தக்க 5 நாள் மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 02 SEP 2024 11:29AM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புத்த கயா இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM BG) உடன் இணைந்து, 2024 செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 6 வரை உருமாறும் 5 நாள் குடியிருப்பு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்திற்கு (MDP) ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் , பஞ்சாயத்து சமிதிகளின் தலைவர், பஞ்சாயத்து தலைவர் (கள்) மற்றும் பல்வேறு பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள், புத்த கயாவில் உள்ள பெருமைக்குரிய இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களின் தலைமை, மேலாண்மை மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி வலியுறுத்துகிறது.

 

தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் நெறிமுறைகள், கிராமப்புற கண்டுபிடிப்பு, சொந்த ஆதார வருவாய் (OSR) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஐந்து நாள் தீவிர திட்டம் இருக்கும். பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகங்களை மிகவும் திறம்பட வழிநடத்த தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் சித்தப்படுத்த வடிவமைக்கப்பட்ட நிபுணர் தலைமையிலான அமர்வுகள், வழக்கு ஆய்வுகள் மற்றும் ஊடாடும் விவாதங்களிலிருந்து பயனடைவார்கள். இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஊரக மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் நிர்வாகத்தை வழங்குவதற்கு, பொறுப்பான அடிமட்ட அமைப்புகளாக ஊராட்சிகள் உள்ளன. அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதிலும், "வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதிலும் மிக முக்கியமான பங்குதாரர்களாக உள்ளனர். இந்த திட்டம் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிப்பதுடன், அவர்களின் சமூகங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய அவர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நிதி நிலைத்தன்மையை அடைவதற்கும், பஞ்சாயத்துகளை திறன்வாய்ந்த பஞ்சாயத்துகளாக மாற்றுவதற்கும் அவசியமான, சொந்த ஆதார வருவாயை (OSR) அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பஞ்சாயத்துகள் தங்கள் நிதி சுதந்திரத்தை வலுப்படுத்துவதன் மூலம், உள்ளூர் தேவைகளை சிறப்பாக நிவர்த்தி செய்து கிராமப்புற வளர்ச்சியை இயக்க முடியும்.

 

இந்த திட்டம், பங்கேற்பாளர்களை சமீபத்திய மேலாண்மை கோட்பாடுகள், கருவிகள் மற்றும் திறன்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த அணுகுமுறை, கிராமப்புற நிர்வாகத்திற்கு கார்ப்பரேட் அளவிலான நிபுணத்துவத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, வளங்களை பயனுள்ள மற்றும் திறமையான பயன்பாட்டை உறுதி செய்கிறது. இந்த மேம்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கிராமப்புற இந்தியாவுக்கு செழிப்பைக் கொண்டுவருவதில் பஞ்சாயத்துகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்.

 

இந்தத் திட்டம், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு கணிசமாக பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இறுதியில் விரைவான கிராமப்புற வளர்ச்சி மற்றும் கிராமப்புற குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழிவகுக்கும்.

 

பின்னணி:

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 2024-ல் தொடங்கப்பட்டது, தலைமைத்துவ / மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் முன்முயற்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் தலைமை மற்றும் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஒரு நீடித்த முயற்சியாகும். இந்த திட்டம் பங்கேற்பாளர்களிடமிருந்தும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களிடமிருந்தும் நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. ஊராட்சித் தலைவர்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்குவதும், திறமையான ஆளுமையை ஊக்குவிப்பதும், அடிமட்ட அளவில் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

மாநிலங்களில் உள்ள சக மாணவர்களிடமிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள் என்றும் கருதப்படுகிறது. இது சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும். கூடுதலாக, திட்டம் முழுவதும் அமைச்சக அதிகாரிகளின் இருப்பு பயிற்சி கட்டமைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை உறுதி செய்கிறது. இந்த முயற்சி, கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், திட்டத்தின் நோக்கங்களை இன்னும் பரந்த அளவில் பரப்பவும் உதவுகிறது.


 

***

(Release ID: 2050758)

MM/RS/KR


(Release ID: 2050794)
Read this release in: English , Urdu , Hindi , Manipuri