தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்தல் குறித்து மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் பெங்களூருவில் விவாதிக்கவுள்ளது

Posted On: 29 AUG 2024 2:34PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் செல்வி ஷோபா கரண்ட்லஜே தலைமையில் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேச அரசுகளுடன்  30.08.2024 அன்று பெங்களூருவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள், கட்டிட தொழிலாளர்கள் தொடர்பான  பிரச்சனைகள், இஎஸ்ஐசி, இ-ஷ்ரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து விவாதிக்கும் வகையில் மண்டல கூட்டம் நடைபெற உள்ளது.

தொழிலாளர் விதிகளின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்ட விதிகளில் தளர்வு, சமூக பாதுகாப்பு பலன்களை எளிதாக அணுகுவதற்கான ஒரே தீர்வாக இ-ஷ்ரம் போர்ட்டலைப் பயன்படுத்துதல், கட்டிட தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், வேலை வாய்ப்புகளுக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் வேலைவாய்ப்பை அளவிடுவது குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்படும்.

***

(Release ID: 2049702)

IR/RS/KR

 



(Release ID: 2049735) Visitor Counter : 20