எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு பிராந்தியத்தில் மாநில அரசுகளின் சமமான பங்கேற்புக்கான மத்திய நிதி உதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 AUG 2024 3:31PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்மின் திட்டங்களை மேம்படுத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பை ஏற்படுத்த மத்திய அரசு நிதி உதவியை (CFA) மாநில நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி ஒத்துழைப்பு மூலம் வழங்குவதற்கான, மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டு முதல் 2031-32-ம் நிதியாண்டு வரை ரூ.4136 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சுமார் 15,000 மெகாவாட் ஒட்டுமொத்த நீர்மின் திறன் ஆதரிக்கப்படும். மின்துறை அமைச்சகத்தின் மொத்த ஒதுக்கீட்டிலிருந்து வடகிழக்கு பிராந்தியத்திற்கான 10% மொத்த பட்ஜெட் ஆதரவு (GBS) மூலம் இந்தத் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்.

மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுடன் இணைந்து செயல்படும் அனைத்து திட்டங்களுக்கும் கூட்டு நிறுவனத்தை உருவாக்க மத்திய மின்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள திட்டம் வகை செய்கிறது.

வடகிழக்கு பிராந்திய அரசின் பங்கு மானியம், மொத்த திட்டப் பங்கில் 24 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ஒரு திட்டத்திற்கு ரூ.750 கோடி என நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு திட்டத்திற்கும் ரூ.750 கோடி என்ற உச்சவரம்பு, தேவைப்பட்டால், ஒவ்வொரு செயலின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும். மானியம் வழங்கப்படும் போது மத்திய பொதுத்துறை நிறுவனத்திற்கும் மாநில அரசுக்கும் கூட்டு முயற்சியில் உள்ள விகிதாச்சாரம் பராமரிக்கப்படும்.

மத்திய அரசு நிதியுதவி சாத்தியமான நீர்மின் திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டத்தை லாபகரமானதாக மாற்ற மாநிலங்கள் இலவச மின்சாரத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்   அல்லது எஸ்ஜிஎஸ்டியை திருப்பிச் செலுத்த வேண்டும்.

*****

IR/KPG/KR

 


(Release ID: 2049444) Visitor Counter : 45