அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இயந்திர கற்றல் திபெத்திய பீடபூமியில் மேலோடு இயக்கங்களை கணிக்க உதவுகிறது
Posted On:
27 AUG 2024 2:46PM by PIB Chennai
திபெத்திய பீடபூமியில் மேலோட்டு சிதைவுகளை மாதிரியாக்க, விஞ்ஞானிகள் பயன்படுத்தும் இயந்திர கற்றல் நுட்பங்கள் அத்தகைய இயக்கங்களின் திசைவேக திசையன்களை முன்னறிவிக்கவும் தட்டு இயக்கங்களின் குணாதிசயத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளன.
பொதுவாக, மேலோட்டு சிதைவை தொடர்ந்து கண்காணிக்க தொடர்ச்சியான இயக்க குறிப்பு நிலையங்களின் (CORS) அடர்த்தியான கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலோடு சிதைவு ஆராய்ச்சிக்கான ஜி.பி.எஸ் தள வேகத்தை கணிக்க இதுபோன்ற சூழ்நிலைகளில் இயந்திர கற்றல் நுட்பம் உதவியாக இருக்கும்.
திபெத்திய பீடபூமி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள 1,271 நிரந்தர தொடர்ச்சியான மற்றும் இயக்க முறை ஜிபிஎஸ் நிலையங்களிலிருந்து தரவை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் மாதிரி பயிற்சிக்காக 892 நிலையங்களிலிருந்து தரவையும், சோதனைக்கு 379 நிலையங்களின் தரவையும் பயன்படுத்தினர்.
ஜர்னல் ஆஃப் ஏசியன் எர்த் சயின்சஸில் வெளியிடப்பட்ட ஆய்வு, திசைவேக திசையன்களை முன்னறிவிப்பதில் இந்த எம்.எல் நுட்பங்களின் செயல்திறனை நிரூபிக்கிறது.
கணிக்கப்பட்ட வேகங்கள் அண்டை ஜிபிஎஸ் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட அதே வடிவங்களைக் காட்டின. எம் எல் அல்காரிதம் ஜியோடெடிக் ஆய்வுத் துறையில் செலவு குறைந்த முறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிரூபிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049046
***
LKS/AG/KR
(Release ID: 2049165)