குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அவசர நிலை பிரகடனம் தர்மத்தை இழிவுபடுத்தியது- அதை மன்னிக்கவோ, புறக்கணிக்கவோ, மறக்கவோ முடியாது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
Posted On:
23 AUG 2024 7:05PM by PIB Chennai
அவசர நிலை அமல்படுத்தப்பட்டது தர்மத்தை அவமதிக்கும் செயல் என்றும், அதை ஏற்றுக்கொள்ளவோ, மன்னிக்கவோ, புறக்கணிக்கவோ, மறக்கவோ முடியாது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறயுள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8 வது சர்வதேச தர்ம தமம மாநாட்டில் உரையாற்றிய திரு தன்கர், இந்த மாபெரும் தேசம் 1975 ஆம் ஆண்டில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம் ரத்தம் சிந்தியது என்றார். உண்மையில், அது தர்மத்தை இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறினார்.
அண்மையில் ஜூன் 25-ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், இந்த தினம் அவசியம் என்றும் அது தர்மத்தின் மீறலை நினைவூட்டும் என்றும் தெரிவித்தார்.
தர்மத்தை வளர்ப்பதும், தர்மத்தை நிலைநிறுத்துவதும் அவசியம் என்று அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு தன்கர், இடையூறுகள் நிறைந்த தற்போதைய அரசியல் சூழல் குறித்து கவலை தெரிவித்தார்.
அனைத்து அரசு அமைப்புகளும் அவற்றின் வரையறுக்கப்பட்ட முறைகளில் இணக்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த திரு தன்கர், இந்த பாதையிலிருந்து எந்த விலகலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், இலங்கையின் புத்த மத விவகாரங்கள் அமைச்சர் திரு விதுரா விக்ரமநாயகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*************
PLM/KV
(Release ID: 2048440)
Visitor Counter : 33