வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்திய பட்டயக் கணக்காளர்ள் கல்வி நிறுவனத்தின் மேற்கு இந்திய மண்டல கவுன்சிலின் 38-வது மாநாடு - மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்பு

Posted On: 23 AUG 2024 8:45PM by PIB Chennai

மும்பையில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் மேற்கு இந்திய மண்டல கவுன்சிலின் 38-வது மண்டல மாநாட்டில், மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான செயல்திட்டம் என்ற தலைப்பில் அமைச்சர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் கல்வி நிறுவனம்  உயர்தர பாடத்திட்டத்தை கொண்டுள்ளதாக கூறினார். இந்த கடுமையான பாடத்திட்டம் வளர்ச்சி அடைந்த பாரத்துக்கான வழிகாட்டியாக அமையும் என்று அவர் கூறினார். அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில், பட்டயக் கணக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என்றும் அவர் கூறினார்.

வளர்ந்த நாடுகளில் கூட பொருளாதார மந்தநிலை மற்றும் அதிக பணவீக்கம் நிலவும் சூழலில் இந்தியா உலகில் வலுவான நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் போர் சூழல் உள்ளபோதிலும், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.  சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திரு பியூஷ் கோயல் கூறினார்.
 

******************  

PLM/KV

 



(Release ID: 2048437) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Marathi , Hindi