தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் - மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்பு
Posted On:
24 AUG 2024 9:48AM by PIB Chennai
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, தொலைத்தொடர்பு இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி ஆகியோர் அண்மையில் அமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் (டிஎஸ்பி) தொடர்பான பங்குதாரர்கள் ஆலோசனைக் குழுவின் (எஸ்ஏசி) இரண்டாவது கூட்டத்தை நேற்று (23.08.2024) நடத்தினர். தொலைத் தொடர்புத் துறையின் முன்முயற்சி இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழல் அமைப்பின் எதிர்காலத்தை விரிவுபடுத்தையும் சிறப்பாக வடிவமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், சர்வதேச தரங்கள், அறிவுசார் சொத்துரிமை, தரநிலை அத்தியாவசிய காப்புரிமையில் இந்தியாவின் பங்கு, தொலைத்தொடர்பு இணைப்பு இடைவெளிகள், தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தினர். தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான திட்டத்தை வரையறுக்கவும், அதை அடைவதில் அரசு உட்பட பல்வேறு பங்குதாரர்களின் செயல்பாடுகளை வரையறுக்கவும் உறுப்பினர்களை அமைச்சர் திரு சிந்தியா கேட்டுக் கொண்டார். மக்களுக்கு நல்ல தரமான தொலைத்தொடர்பு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சேவை வழங்கும் நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தொலைத் தொடர்புத் துறை தொடர்பான பல்வேறு விஷயங்களில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க ஆறு தனித்துவமான பங்குதாரர்கள் ஆலோசனைக் குழுக்களை அமைச்சர் சிந்தியா அமைத்துள்ளார். தொலைத்தொடர்புத் துறை தொடர்பான விஷயங்களில் அரசுடன் நிலையான இருவழி உரையாடலை எளிதாக்குவதை இக்குழுக்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தொழில்துறை சிந்தனையாளர்கள், உயர்நிலைத் தலைமை நிர்வாக அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனத்தினர் ஆகியோர் இந்த ஆறு ஆலோசனைக் குழுக்களில் (எஸ்ஏசி) உறுப்பினர்களாக உள்ளனர்.
*****
PLM / KV
(Release ID: 2048432)
Visitor Counter : 47