கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல் சார் பயிற்சி அமைப்பில் தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் பங்கேற்பு
Posted On:
23 AUG 2024 6:57PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், மகாராஷ்டிர மாநிலம் போவாயில் உள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார்.
திரு சோனாவால், போவாய் கடல்சார் பயிற்சி அமைப்பின் (எம்.டி.ஐ.யின்) மாணவர்களுடன் உரையாடியதோடு, முதல் தேசிய விண்வெளி தினத்தையும் கொண்டாடினார். இது 2023, ஆகஸ்ட் 23 அன்று சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடு மற்றும் அதன் தென் துருவப் பகுதியை அடைந்த முதல் நாடு என்ற பெருமைக்குரிய சாதனையை எடுத்துக்காட்டுகிறது.
மூத்த அதிகாரிகள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய திரு சோனாவால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அமிர்த காலத்தின் தொலைநோக்குப் பார்வையில் கற்பனை செய்துள்ளபடி வளர்ச்சியடைந்த சர்வதேச சக்தியாக மாறும் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று வலியுறுத்தினார்.
மாலுமிகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இளம் தலைமுறையினர் நல்ல ஆரோக்கியம், உடற்தகுதி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும், நாட்டின் முதன்மையான பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறும்போது பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஊக்கம் அளித்து தனது உரையை நிறைவு செய்தார்.
-----
LKS/KPG/DL
(Release ID: 2048310)
Visitor Counter : 44