புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு 2021-22 & 2022-23 குறித்த தரவு பயனர் மாநாடு ஆகஸ்ட் 23, 2024 அன்று சென்னையில் நடைபெறும்

Posted On: 22 AUG 2024 8:46PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், 2021-22 மற்றும் 2022-23 காலகட்டங்களுக்கான இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பை நடத்தியது. இந்த ஆய்வுகள் முறையே ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை மற்றும் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை மேற்கொள்ளப்பட்டன.  இந்த ஆய்வுகளின் முடிவுகளைச் சுருக்கமாகக் கொண்ட ஒரு  அறிக்கை ஜூன் 14, 2024 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விரிவான அறிக்கைகள் மற்றும் அலகு அளவிலான தரவு ஜூலை 5, 2024 அன்று கிடைத்தது. இவை இரண்டையும் www.mospi.gov.in  என்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் அணுகலாம்.

இந்த முடிவுகள் குறித்த ஒரு நாள் தரவு பயனர் மாநாடு, தரவு பயனர்கள் / பங்குதாரர்களுடன்  மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தொடர்பு மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 23, 2024 அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் போது, பல்வேறு முக்கிய கருத்துகள், வரையறைகள், முடிவுகள், அலகு அளவிலான தரவு மற்றும் முறைகள், தரவு தரத்தின் மதிப்பீடு ஆகியவை விவாதிக்கப்படும்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குநர் டாக்டர் என்.ஆர்.பானுமுர்த்தி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய மாதிரி கணக்கெடுப்பின் வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள், திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் இதர மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் அதிகாரிகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளிட்ட உயர் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047833

 

BR/KR

***



(Release ID: 2048015) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi