ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாநாடு: சங்கதன் ஸ்வஸ்திய சம்ரிதி. உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மகளிர் கூட்டு செயல்பாடு புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 22 AUG 2024 8:39PM by PIB Chennai

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இன்று உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த தேசிய மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. மத்திய ஊரக மேம்பாடு மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் தனது முக்கிய உரையில், நாட்டு மகள்களின் திறனின் மூலம் வளர்ந்த பாரத்தை  உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார். சுய உதவிக் குழு உறுப்பினர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

 

வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விளைவுகளை அடைவதில் கிராமப்புற சூழலை மாற்றுவதில் சுய உதவிக் குழுக்களின் முக்கிய பங்கை ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி வலியுறுத்தினார். உணவு ஊட்டச்சத்து சுகாதாரம் என்பது ஒரு புரட்சி என்று அவர் கூறினார். வலிமையான பெண்கள், வலுவான குடும்பம், வலுவான பாரதம் என மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் கே பால், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றுக்கான பாதையை விளக்கினார். இந்த செயல்பாட்டில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடிநீர் மற்றும் துப்புரவு துறை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பிரதிநிதிகள், சமூக நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சி.எஸ்.ஓ பங்குதாரர்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பங்கேற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047830

 

BR/KR

***

 


(Release ID: 2048002) Visitor Counter : 49


Read this release in: English , Urdu , Hindi