கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார வாகனப் போக்குவரத்து, மூலதனப் பொருட்கள் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கை கனரக தொழில்கள் துறை அமைச்சகம் நடத்தியது
Posted On:
22 AUG 2024 6:16PM by PIB Chennai
இந்தியாவின் மின்சார வாகன சூழல் அமைப்பை மேம்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கனரக தொழில்கள் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.
கனரக தொழில்கள் அமைச்சகம் (MHI) புது தில்லியில் உள்ள உத்யோக் பவனில் மின்சார வாகனம், மூலதன பொருட்கள் குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வெபினாரை ஏற்பாடு செய்தது. மத்திய அமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணை அமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மா, செயலாளர் கம்ரான் ரிஸ்வி, மூத்த அதிகாரிகள் மற்றும் வாகனத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் குமாரசாமி தமது உரையில், 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான நோக்கத்துடன் இந்தியா செயல்படுகிறது என்றார். மேம்பட்ட மூலதன பொருட்கள் முக்கிய முயற்சிகள் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த முயற்சிகள் தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தை துரிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இணை அமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி பயணிக்கிறது என்றார். இதில் வாகனத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார். வாகனம் மற்றும் உதிரிபாகங்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் கனரக தொழில்துறை அமைச்சகம் தற்சார்பை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.
******
(Release ID: 2047760)
PLM/RR/KR
(Release ID: 2047997)
Visitor Counter : 39