திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) பிளிப்கார்ட்டின் விநியோகச் சங்கிலி செயல்பாட்டு அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 22 AUG 2024 8:49PM by PIB Chennai

உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியான கவனம் செலுத்தி வருவதாக மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், சுய உதவிக் குழுக்கள், பெண்கள், கிராமப்புற தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதற்காநிகழ்வில் அவர் உரையாற்றினார்.

சமர்த் நிகழ்வில், இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட்டின் விநியோகச் சங்கிலி செயல்பாட்டு அமாடமி, (எஸ்சிஓஏ) திறன் மேம்பாடு - தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் (எம்.எஸ்.டி.இ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (எம்.ஓ.யு) பரிமாறிக் கொண்டது.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வேலைவாய்ப்புக்காக மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0-ன் கீழ், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈ-காமர்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி துறைகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மேம்படுத்தப்படும்.

இதன் கீழ் பிளிப்கார்ட் குழு 7 நாட்கள் தீவிர வகுப்பறை பயிற்சியுடன் விண்ணப்பதாரர்களுக்கு முழுமையான அனுபவத்தையும் பயிற்சியையும் வழங்கும்.  அதைத் தொடர்ந்து 45 நாட்கள் பிளிப்கார்ட் நிறுவனம் தமது கிளைகளில் நேரடி தொழில் அனுபவத்தை வழங்கும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி பேசுகையில், "கைவினைக் கலைஞர்களை மேம்படுத்துவதற்கும், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்த பல்வேறு கைவினைப்பொருட்களை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார். பாரம்பரிய கைவினைப்பொருட்களை டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், குறு, சிறு தொழில் துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் 250 க்கும் மேற்பட்ட தொழில்துறையினர், விற்பனையாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள், சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Release ID: 2047842

*************************************



(Release ID: 2047971) Visitor Counter : 41


Read this release in: English , Urdu , Hindi