பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்வார் கடற்படைத் தளத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர்

Posted On: 21 AUG 2024 6:07PM by PIB Chennai

பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் 2024 ஆகஸ்ட் 20-21 தேதிகளில் கர்நாடக கடற்படை தளமான கார்வாருக்கு வருகை தந்தார். தளத்தின் செயல்பாட்டு திறன்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இந்திய கடற்படையின் நீல-நீர் திறன்களை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்த இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை உள்கட்டமைப்பு திட்டமான கடற்பறவை திட்டத்தை அவர் ஆய்வு செய்தார். ஆசியாவின் மிக மேம்பட்ட கடற்படை தளங்களில் ஒன்றாக கார்வார் தளத்தை மேலும் மேம்படுத்தும் திட்டங்களை இது கொண்டுள்ளது.

சஞ்சய் சேத் அமடல்லியில் உள்ள கடற்படை குடிமக்கள் குடியிருப்பு காலனிக்கு சென்று, இந்திய கடற்படையின் சிவில் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். ஆயுதப்படைகளின் நலனை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், எந்தவொரு செயல்பாட்டு அல்லது உள்கட்டமைப்பு சவால்களையும் எதிர்கொள்வதில் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைப்பதை உறுதி செய்தார்.

மேற்கு கடற்படையின் ஆடவர் மற்றும் மகளிர் பணியாளர்களுடன் திரு சஞ்சய் சேத் கலந்துரையாடினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்படையின் வலுவான இருப்பைப் பாராட்டிய அவர், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். கடற்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு சிவிலியன்கள் தொடர்ந்து தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.

1961 விடுதலை நடவடிக்கையின் போது அஞ்சதீப் தீவை விடுவிக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த கடற்படை வீரர்களுக்கும் பாதுகாப்பு இணை அமைச்சர் மரியாதை செலுத்தினார்.

திரு சஞ்சய் சேத், கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் தருண் சோப்தி ஆகியோரை கர்நாடக கடற்படை பகுதி கொடி அதிகாரி கமாண்டிங் ரியர் அட்மிரல் கே.எம்.ராமகிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சருக்கு சம்பிரதாய காவலர் மரியாதை வழங்கப்பட்டது. நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை இந்தப் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

***

PKV/AG/DL


(Release ID: 2047388) Visitor Counter : 85


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP