பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பிரதமர் திரு கிஹாரா மினோரு ஆகியோர் புதுதில்லியில் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தினர்
Posted On:
20 AUG 2024 9:39PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு கிஹாரா மினோரு ஆகியோர் 2024 ஆகஸ்ட் 20 அன்று புதுதில்லியில் இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் இடையே, இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சர்கள் மதிப்பாய்வு செய்தனர் மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.
இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பிராந்திய அமைதிக்கான பங்களிப்பிலும் தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்களின் பன்முகத்தன்மையை வரவேற்றுள்ள அமைச்சர்கள், இந்த ஈடுபாடுகளை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். பாதுகாப்பு தளவாடங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப களங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் உறுதி பூண்டனர்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் நுழையும் போது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை இந்தியா நிர்ணயித்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை உருவாக்குவது இந்த தொலைநோக்கின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று கூறிய அவர், இந்த இலக்கை அடைய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையில் கூட்டு சேருவது முக்கியமாக இருக்கும் என்று கூறினார்.
***
(Release ID: 2047107)
PLM/RS/KR
(Release ID: 2047260)
Visitor Counter : 52