பாதுகாப்பு அமைச்சகம்

3-வது இந்தியா-ஜப்பான் 2+2 அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்ட ஊடக அறிக்கை

Posted On: 20 AUG 2024 9:13PM by PIB Chennai

ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர்
"திரு கிஹாரா மினோரு அவர்களே, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்
திருமதி யோகோ கமிகாவா அவர்களே, வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களே, பத்திரிகை உறுப்பினர்களே,

வணக்கம்!
மூன்றாவது இந்தியா ஜப்பான் 2+2 பேச்சுவார்த்தையை இந்தியாவில் இணைந்து நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேம்படுத்த உதவும் சிறந்த கலந்துரையாடலுக்காக அமைச்சர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களை நான் பாராட்கிறேன். நமது இருதரப்பு உறவுகளில் அர்ப்பணிப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். நமது சிறப்பான உலகளாவிய உத்திசார் ஒத்துழைப்பு நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் கொண்டாடும் நிலையில், இந்த ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பொறுத்தவரை நம் இரு நாடுகளும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
செப்டம்பர் 2022-ல் டோக்கியோவில் நடந்த எங்கள் கடைசி சந்திப்பிலிருந்து கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்பதை பத்திரிகை உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றைய நமது விவாதங்களின்போது, பரஸ்பர அக்கறை கொண்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவரித்தோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரண்டு முக்கிய பங்குதாரர்கள் என்ற முறையில், இந்தியாவும் ஜப்பானும் பல வழிகளில், இந்த பிராந்தியத்தின் முக்கியமான பாதுகாவலர்களாக உள்ளன. எனவே, இந்த ஒத்துழைப்பு இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாகும்.
2023 ஆம் ஆண்டு நமது பாதுகாப்பு ஈடுபாடுகளில் ஒரு மைல்கல் ஆண்டாகும். கூட்டு சேவைகள் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மற்றும் நமது விமானப் படைகளுக்கு இடையேயான முதலாவது போர் பயிற்சியான வீர் கார்டியன் பயிற்சி நமது பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான செழிப்பான ஒத்துழைப்பின் அடையாளமாகும்.

நமது பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜப்பானின் துணை பாதுகாப்பு அமைச்சர் இடையேயான பாதுகாப்புக் கொள்கை பேச்சுவார்த்தை (DPD) ஏப்ரல் 2023-ல் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு துறையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்து 2047-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது, வளர்ச்சியடைந்த மற்றும் மாற்றமடைந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் தொலைநோக்கு பார்வையை வகுத்துள்ளோம். தற்சார்பு இந்தியாவை அடைய உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை உருவாக்குவது இந்த பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையில் ஜப்பானுடன் கூட்டு சேர்வது, இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றும் நமது இலக்கை அடைவதற்கு கருவியாக இருக்கும். இந்தோ- பசிபிக் குறித்து இந்தியாவும் ஜப்பானும் பகிர்ந்து கொள்ளப்பட்ட தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து மற்றும் பொதுவான பார்வை வளர்ந்து வருகிறது. ஆசியான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ADMM பிளஸ் அமைப்பில் இந்தியா தீவிர உறுப்பினராக உள்ளது. இன்றைய கூட்டத்தில், இந்த மண்டலத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக சிறந்த முடிவுகளை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எங்களது உறுதிப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்தினோம்.
இன்று மிகவும் பயனுள்ள விவாதங்களை நடத்தியதற்காகவும், இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதற்காகவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு கிஹாரா மினோரு மற்றும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் திருமதி யோகோ கமிகாவா ஆகியோருக்கு நான் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

***

(Release ID: 2047098)

PLM/RS/KR



(Release ID: 2047236) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP