பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு அமைச்சகத்தின் பொது மீள்குடியேற்ற இயக்குநரகத்துடன் இணைந்து ஐ.ஐ.சி.ஏ, மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சுயாதீன இயக்குநர்களாக உருவாக்குவதற்கான முதல் சான்றிதழ் திட்டத்தைத் தொடங்கியது

Posted On: 20 AUG 2024 8:26PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் பொது மீள்குடியேற்ற இயக்குநரகத்துடன் இணைந்து இந்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான இந்திய நிறுவனம் (ஐ.ஐ.சி.ஏ) குருகிராம், மானேசரில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான முதலாவது சான்றிதழ் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது.

இந்த இரண்டு வார சான்றிதழ் திட்டத்தில் மூன்று சேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற 30 மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏர் வைஸ் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள் மற்றும் ரியர் அட்மிரல்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இரண்டு வார கால நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 31,  2024 அன்று சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடையும்.

கார்ன் ஃபெர்ரியின் ஆசிய பசிபிக் / இந்தியா லீட்-போர்டு சர்வீசஸின் நிதி சேவைகளின் மேலாண் இயக்குநர் மற்றும் கௌரவ விருந்தினரான திருமதி மோனிகா அகர்வால் தனது முக்கிய உரையில், பெருநிறுவன ஆளுகையின் முக்கிய கருவியாக வாரியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பெருநிறுவன ஆளுகையின் தரத்தை மேம்படுத்துவதில் வாரிய உறுப்பினர்களின் பங்கை அவர் வலியுறுத்தினார். தற்போதைய வாரியங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் சுயாதீன இயக்குநர்களிடம் எதிர்பார்க்கப்படும் பங்கு குறித்து திருமதி அகர்வால் கவனத்தை ஈர்த்தார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் நிபுணத்துவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் அவர்களை வாரியங்களில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் தலைமை மற்றும் மதிநுட்பத்தைப் பயன்படுத்த பெருநிறுவனங்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இந்திய நிறுவனங்கள்  மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அவரது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047073

BR/KR

***


(Release ID: 2047185) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP