பாதுகாப்பு அமைச்சகம்
வீரத்தின் நீரோட்டம்1.0: தேசக்கட்டுமானத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்திய ராணுவம்
Posted On:
19 AUG 2024 5:22PM by PIB Chennai
முன்னோக்கிய பார்வையுடனான ஒரு முன்முயற்சியாக மூத்த ராணுவ அதிகாரிகளுடன் வீரத்தின் நீரோட்டம் 1.0 என்ற கலந்துரையாடலுக்கு தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி தலைமை தாங்கினார். தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், வளமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இது மிகப்பெரிய நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மூத்த முன்னாள் ராணுவ அதிகாரிகளை வரவேற்று பேசிய அவர், சீருடையில் இருந்தபோதும், அதற்கு பின்னரும் தேசத்திற்கான சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக தமது நன்றியை தெரிவித்தார். இந்த முதல் முயற்சி வெறும் சந்திப்பல்ல என்றும், ராணுவத்தின் தற்போதைய தலைமைக்கும், முன்பிருந்த அதிகாரிகளுக்கும் இடையே சிந்தனை பரிமாற்றத்திற்கான குறிப்பிடத்தக் தளம் என்றும் அவர் கூறினார். பரவலாக உள்ள மூத்த அதிகாரிகள் சமூகத்தை ஈடுபடுத்துவதன் மூலம், இந்திய ராணுவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஊக்கம் பெறுவதற்கு அவர்களின் மதிப்புமிகு ஞானத்தை உறுதி செய்துவது மட்டுமின்றி, தேசத்தின் கட்டுமானத்திலும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற குறிக்கோளை அடைவதற்கும், அவர்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று ஜெனரல் உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பேசுகையில், மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது ராணுவத்தின் திட்டமிடலுக்கும், உத்தி வகுத்தலுக்கும் முக்கியமானதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார். அவர்களின் அனுபவம் மிகப்பெரிய சொத்தாகும் என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் நீண்ட கால நோக்கங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ படைப்பிரிவுகளின் முயற்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டுவரும் என்றார்.
மாற்றத்தின் பத்தாண்டுகள் என்பதை எடுத்துரைப்பது இந்த நிகழ்வின் மையப்பொருளாக அமைந்தது. நவீன மயத்திலும், தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பிலும் கவனம் செலுத்துவது செயல்பாட்டு திறனை விரிவுப்படுத்துவது ஆகியவற்றில் அடுத்த பத்தாண்டுக்கான இந்திய ராணுவத்தின் கண்ணோட்டத்திற்கு விரிவாக திட்டமிடுவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046676
****
SMB/RS/DL
(Release ID: 2046744)