பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
போதைப்பொருள் பழக்கம், சட்டவிரோத சுரங்கம் மற்றும் பசு கடத்தலுக்கு எதிரான இயக்கத்தில் இணையுமாறு சமூக-மத அமைப்புகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுக்கிறார்
प्रविष्टि तिथि:
19 AUG 2024 6:25PM by PIB Chennai
மத்திய (தனிப் பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்; பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், போதைப் பழக்கம், சட்டவிரோத சுரங்கம் மற்றும் பசு கடத்தல் போன்ற சமூக தீமைகளுக்கு எதிரான நடவடிக்கையில் இணையுமாறு ஜம்மு-காஷ்மீரின் சமூக-மத அமைப்புகளுக்கு இன்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ அமர்நாத் யாத்ரா நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
"இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்காக போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபட அரசு ஒரு சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது, என்றும் கத்துவா மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் கால்நடை கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது" என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இப்போது, சமூக-மத அமைப்புகள் சமூகத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நோக்கத்தை நோக்கிய அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், மேலும் இந்த தீமைகளிலிருந்து சமூகத்தை விடுவிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமூக-மத அமைப்புகளை அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார், இதனால் அதிகமான மக்கள் அவற்றிலிருந்து பயனடைய முடியும் என்று கூறினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டம், விஸ்வகர்மா திட்டம் போன்ற திட்டங்கள் அரசியல் சார்புகள், மத நம்பிக்கைகள், சாதி மற்றும் பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046717
***
IR/AG/DL
(रिलीज़ आईडी: 2046742)
आगंतुक पटल : 72