குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆந்திர மாநிலம் வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 23-வது ஆண்டு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்
Posted On:
17 AUG 2024 2:12PM by PIB Chennai
வணக்கம்,
நண்பர்களே,
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு மிகவும் மதிக்கப்படுபவர். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
நண்பர்களே, அவரது கொள்கைகள் மற்றும் இலட்சியங்களைப் பின்பற்றுவது எளிது. ஆனால் அவரது இடத்துக்குச் செல்வது கடினம். மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரின் தாயகமாக உள்ள பாரதத்தின் முன்னணி ஆளுமைகளில் ஒருவர் அவர். தேசத்தின் நலனுக்காக உழைக்கிறார். அவர் இந்த ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையைத் தொடங்கினார். அவர் அனைத்து கடினமான காலங்களையும் பார்த்தவர்.
ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை, அதன் 23 வது ஆண்டில், அடி எடுத்து வைத்துள்ளது. இந்த அறக்கட்டளை சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வருகிறது. விரைவில் அதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
ஒவ்வொரு இந்தியனும் பொருளாதார தேசியவாதத்தை நம்ப வேண்டும். பொருளாதார தேசியவாதம் சுதேசியின் ஒரு அம்சம்.
நாம் பல பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இதன் மூலம் நமது அந்நியச் செலாவணி வெளியேறி வருகிறது. இந்த நாட்டில் தயாரிக்க வாய்ப்புள்ள பொருளை இங்கேயே தயாரிக்க வேண்டும்.
நண்பர்களே, மற்றொரு தீவிரமான பிரச்சினை இயற்கை வளங்கள்: நாம் தேவையான நுகர்வை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். எந்த வடிவத்திலும் அனைத்து இயற்கை வளங்களும் உகந்ததாக பயன்படுத்தப்பட வேண்டும்.
நமக்கு ஒரு கலாச்சாரம் இருக்க வேண்டும். நாம் எப்போதும் தேசத்தை முதன்மையாக வைத்திருக்க வேண்டும், அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டு, சுயநலனுக்கு அப்பாற்பட்டு, பொருளாதார நலனுக்கு அப்பாற்பட்டு தேசத்தை முதன்மையாக வைத்திருக்க வேண்டும்.
நான் இந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் அதன் காலாட்படை வீரன்போல உள்ளேன்.
நாட்டில் உள்ள சிலர், பொருத்தமற்ற காரணங்களுக்காக, தேசிய நலனை விட தங்கள் அரசியல் நலனை முக்கியமாக வைத்துள்ளனர். அவர்கள் மாறுவார்கள் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்; நாட்டின் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களுக்கு மரியாதை செலுத்தி தேசத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வோம்.
நன்றி
************
PLM / KV
(Release ID: 2046284)
Visitor Counter : 58