கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற கப்பல் மாலுமியின் மகளான மனுபாக்கருக்கு மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
16 AUG 2024 6:28PM by PIB Chennai
பாரிஸ் ஒலிம்பிக் 2024-ல் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனுபாக்கருக்கு மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் பாராட்டு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பூலாம் கமுசா எனப்படும் கப்பல் மாதிரி வடிவம் ஒன்றை மனுபாக்கருக்கு பரிசளித்த அமைச்சர், இந்திய துறைமுகங்கள் சங்கம் சார்பில், ரூ. 10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சர்பானந்த சோனாவால், கப்பல் மாலுமியின் மகளான மனுபாக்கர், ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவராக திகழ்கிறார் என்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்திய இளைஞர்களின் சிறந்த குறிக்கோளுக்கான உணர்வுடன் அதனை அடைவதற்கான மன உறுதியுடனும் மனுபாக்கர் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் உற்சாகமூட்டும் தலைமையின் கீழ் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குவதற்கான உணர்வு மற்றும் சூழலியலை ஏற்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் திரு சோனாவால் கூறினார். இந்த ஊக்கம் தான் நமது வீரர்கள் சர்வதேச அளவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046027
***
MM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2046083)
வருகையாளர் எண்ணிக்கை : 86