பாதுகாப்பு அமைச்சகம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி பாராட்டு
Posted On:
16 AUG 2024 4:22PM by PIB Chennai
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை, ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி பாராட்டியுள்ளார். புதுதில்லியில் உள்ள சௌத்பிளாக் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சாதனைகளை கொண்டாடுவதற்கான விழாவாக மட்டுமின்றி, நாட்டில் விளையாட்டுத் திறமையை ஊக்குவிப்பதில் இந்திய ராணுவம் ஆற்றிவரும் பணியை அங்கீகரிப்பதாகவும் அமைந்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மொத்தம் 6 பதக்கங்களை (1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம்) வென்ற நிலையில், இந்திய ராணுவத்தின் சுபேதார் மேஜர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் நாட்டிற்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தந்தார். அவரது இந்த தலைசிறந்த செயல்பாடு, ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
மேலும் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற சுபேதார் பொம்மன்தேவரா தீரஜ், நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டு 4-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு ஏதென்று ஒலிம்பிக்கில் ராணுவத்தின் கர்னல் ரத்தோர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் சுபேதார் மேஜர் (கௌரவ கேப்டன்) விஜய் குமார் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். சுபேதார் மேஜர் நீரஜ் சோப்ரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி, வருங்காலத்திலும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய உச்சத்தை எட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045963
***
MM/AG/DL
(Release ID: 2046016)
Visitor Counter : 73