தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இபிஎஃப்ஓ-ன் ஆய்வாளர் மற்றும் உதவியாளருக்கான புதுப்பிக்கப்பட்ட கையேட்டை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 14 AUG 2024 6:36PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆய்வாளர் மற்றும் உதவியாளருக்கான புதுப்பிக்கப்பட்ட கையேட்டை புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

இந்தக் கையேடு எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் திசைகாட்டியாக செயல்படும். எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த கையேட்டை அனைத்து அதிகாரிகளும் உள்வாங்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாணடவியா வலியுறுத்தினார்.

இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம். இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுடன் இந்தக் கையேடு இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேடு வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் செயல்திறனுக்கான இபிஎஃப்ஓ-ன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இபிஎஃப்ஓ-வின் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நாடு முழுவதும் சமூகப் பாதுகாப்பின் ஆற்றல்மிக்க, பரிவுணர்வு மற்றும் வளமான சாம்பியன்களாக வளர இந்தக் கையேடு ஒரு ஊக்கியாக செயல்படும்.

முந்தைய சிந்தனை அமர்வில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, மத்திய நிதி ஆணையர் திருமதி நீலம் ஷாமி ராவ் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

-----

PKV/KPG/DL



(Release ID: 2045418) Visitor Counter : 28