குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 14 AUG 2024 5:07PM by PIB Chennai

சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த முக்கியமான நாள் இறையாண்மை பாரதத்தின் அடித்தளத்தை அமைத்த எண்ணற்ற கதாநாயகர்களின் வெல்லமுடியாத துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தியாகத்தை நினைவூட்டுகிறது. உலகின் மிகப்பெரிய, துடிப்பான ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களின் கொண்டாட்டமாகவும் இது திகழ்கிறது.

 

நமது விடுதலைப் போராட்டம் வலியுறுத்திய உயர்ந்த மதிப்புகளுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாரம்பரியத்தை நாம் கௌரவிக்கும் அதே வேளையில், ஒரு நாடாக நாம் கடந்து வந்த கூட்டுப் பயணத்தைப் பிரதிபலிப்போம், மேலும், 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைய கடுமையாக உழைப்போம்.

 

 

***



IR/RR/KV/DL

 


(रिलीज़ आईडी: 2045352) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri , Telugu